ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

வேலூர் ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ டார்ச்சர் ..

tamil.indianexpress. வேலூர் அருகே ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவன் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்து கையும் களவுமாக சிக்கி கொண்டான். ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியைக்கு மாணவன் காதல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியை மற்றும் மாணவிகளை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த மாணவன் அதை அவ்வப்போது பார்த்து ரசித்ததும் தெரியவந்துள்ளது. மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் எதுபோன்ற நடவடிக்கை எடுப்பது என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக