புதன், 19 செப்டம்பர், 2018

பாமகவில் புதிய துணை தலைவராக நடிகர் ரஞ்சித் ...

pmknakkheeran.i -/kalaimohan: பாமக நிறுவனர் ராமதாஸ் நடிகர்கள் அரசியலில் கால் பாதிப்பதை கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வந்தார். விஜயகாந்த் கட்சி தொடங்கும் பொழுது கூட அவருக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக ராமதாஸ் இருந்தார். நடிகர்கள், அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வந்த நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு கருத்துக்களைக் கூறி வந்தார். இந்நிலையில் கந்த ஜூலை 23-ஆம் தேதி பாமகவில் இணைந்த பிரபல துணை நடிகர் ரஞ்சித்துக்கு தற்போது துணை தலைவர் பதவி வழங்கபட்டிருக்கிறது ஆர்.கே.செல்வமணியின் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக