புதன், 12 செப்டம்பர், 2018

மேற்கு தொடர்ச்சி மலை .. தமிழ் சினிமாவை மலை உச்சிக்கு தூக்கி சென்ற இயக்குனர்

Shalin Maria Lawrence: நான் வைரங்கள் அணிவதில்லை
சிறு வயதில் அதிக பணமில்லாமல் இருந்த பொது வைரங்கள் மேல் அதீத ஆசை இருந்தது.பொருளாதாரம் சரி ஆகி வைரங்கள் வாங்கும் தருவாயில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது .ஒரே படம்தான் .மொத்த வைர கனவும் க்ளோஸ் .
படத்தின் பெயர் பிளட் டைமண்ட் (ரத்த வைரம் ) ,டிகாப்ரியோ நடித்த படம் .என் வாழ்வில் என்னை பாதித்த முக்கிய படங்களில் முதன்மையானது .நாம் தினந்தோரும் வாழ்வில் அணியும் வைரங்கள் எங்கிருந்து வருகின்றன ,அந்த வைரத்தை யார் எடுக்கிறார்கள் ,எவர் மூலம் எடுக்கிறார்கள் ,எப்படி எடுக்கிறார்கள் ,இபப்டியெல்லாம் செய்வதினால் யார் எப்படி பாதிக்க படுகுரர்கள் என்று வைர ஏற்றுமதியை அக்குவேறு ஆணிவேராக உலகத்திற்கு முதன் முதலில் எடுத்து சொன்ன திரைப்படம் அது .
வைரத்தோடு வைரமூக்குத்தி என்று நாம் நாளுக்கு நாள் சிலாகித்து பேசி ,அலட்டி ,உடம்பில் பகட்டாய் அணிந்துகொண்டு சுற்றுகிறோமே அந்த வைரங்களில் மனிதர்களின் ரத்தம் தோய்ந்திருப்பதை காட்டி கொடுத்த படம் அது .
உலகின் பல இடங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்ற .ஆனால் பெரும்பாலான இடங்களில் அந்த வைரங்களுக்காக மனித உரிமை மீறல்களை ,குழந்தை தொழிலாளர் முறைகளை ,உள்நாட்டு யுத்தங்களை ,அடக்குமுறையை ,பாலியல் வன்முறையை ,உயிரிழப்புகளை பெரிய வைர கம்பெனிகள் தங்கள் சுயநலத்திற்காக நிகழ்த்துகின்றன .

ஒவ்வொரு வைரக்கல்லுக்கு பின்பும் ஒரு கதை இருக்கிறது என்று அந்த படம் எனக்கு உணர்த்தியது .அன்றிலிருந்து நான் வைரங்கள் வாங்கும் ஆசையை விட்டுட்டேன் .அன்பளிப்பாய் வந்த வைரங்களையும் திருப்பி கொடுத்துவிட்டேன் .
ஆனால் இந்த படம் இதை மட்டும் செய்யவில்லை ,இந்த படத்திற்க்கு பின்னால் "Fair trade " எனப்படும் (நியாய வர்த்தகம் ) எனும் ஒரு சமூக அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன் .
அவர்களின் நோக்கம் ஒன்றுதான் .வளரும் நாடுகளில் எங்கே எல்லாம் ஏதாவது முக்கிய இயற்கை பொருள் உற்பத்தி செய்ய படுகிறதோ அந்த உற்பத்தி முறை நியாயமாக இருக்க வேண்டும் .தொழிலார்களுக்கு சரியான சம்பளம் ,அவர்களுக்கு இருக்க இடம் ,அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி ,மின்சாரம் ,சரியான வேலை நேரம் ,குழந்தை தொழிலாளர்கள் இல்லாமை ,அவர்களுக்கு சரியான இலவச மருத்துவ வசதி ,எங்கேயும் மனித உரிமை மீறாமல் இருக்கவேண்டும் ,அவர்களின் பூர்வகுடி நிலங்கள் அவர்கள் உபயோகத்திற்கு இருக்க வேண்டும் போன்ற உத்திரவாதங்களை பெரிய நிறுவனங்கள் கொடுத்து அதை செயல்படுத்தினால் அது "fair trade ".
இன்று நாம் குடிக்கும் காபியில் இருந்து ,சாக்லேட் ,தாவர எண்ணெய்கள் ,vaasanai திரவியங்கள் என்று "fair trade " இன் கீழ் வரும் பொருட்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கின்றது .
சரி ,இந்த விஷயத்தை நான் என் சொல்லவேண்டும் என் இப்படி ஒரு நீண்ட கட்டுரை எழுத வேண்டும் ?
மேற்கு தொடர்ச்சிமலை படம் என்னென்னமோ கருத்து சொல்கிறது என்று சொல்லுகிறார்கள் ஆனால் எனக்கு அந்த படம் பார்க்க ஆரம்பித்ததும் "fair trade " விஷயம் தான் வேக வேகமாக மூளையை தட்டியது .
ஏலக்காய் இவ்வளவு விலை virkiradhu என்று பினாத்தி இருக்கிறோமே தவிர என்றைக்காவது அந்த போறும் எங்கிருந்து வருகிறது ,அதை நமக்கு கொண்டு சேர்க்க ஒரு விளிம்பு நிலை மனிதன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் ,அவன் வாழ்வு தரம் எப்படி இருக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா ?
How are we socially and selectively so blind and deaf ?
சார் வைரம் மாதிரி இல்ல சார் ஏலக்கா ,பாக்க ஒரு மாதிரி காஞ்சு போய் இருக்கும் ,ஆனா வாசனை பட்டய கிளப்பும் சார் .
பணக்காரங்க வீட்ல ஜாடில இருக்கும் ,ஏழ வீட்ல ஒரு சின்ன கவர்ல நாலு லவங்கம் ,ரெண்டு பட்டையோட ஒரு பேப்பர்ல மடிச்சு இருக்கும் சார் .ஆனா ஏலக்கா எல்லார் வீட்லயும் இருக்கும் சார் .சாப்பிட்டு தூக்கி போடுற விஷயம் ஆனா வாசனை மட்டும் போகாது .
மேற்குத்தொடர்ச்சி மலையும் அப்படித்தான் இருக்கிறது .அதனை அழகில்லாத ,கவர்ச்சி இல்லாத ஏலக்காய் போல .
ஆனா வாசனை இருக்கு சார் .அத மறுக்க முடியாது இல்ல ?
எனக்கு படம் பிடிச்சுது சார் .
எனக்கு மேற்கு தொடர்ச்சி மலைய பத்தி ஒன்னும் தெரியாது சார் ,இந்த படம் அந்த மக்களை அப்படியே காட்டுதுன்னு அங்க இருந்து வந்த மக்கள் சொன்னாங்க .அப்படினா இதுதான் அந்த மக்கள் ,இதுதான் அவங்க வாழ்வியல்னா செம்ம சார் .
சார் நான் மெட்ராஸ் பொண்ணு .பூர்வகுடி ஆனா எங்க விளிம்பு நிலை மனிதர்களோடு வாழ்வியலும் இதுவும் பெரிய வித்தியாசம் இல்ல .
கூலிக்கு வேல ,மாடு மாதிரி உழைப்பான் ,அவனுக்குனு சொந்தமா நிலம் இல்ல . இந்த படத்து ஹீரோ மலையில ஏறி எறங்குற மாதிரிதான் எங்க ஊர் பசங்க சாக்கடைக்குள்ள உயிரை பணயம் வச்சி ஏறி எறங்குவாங்க .
உங்க ஹீரோவும் பூர்வகுடிதான் .அங்க .
சார் இது தலித் படம் தானே ?
எனக்கு அப்படித்தான் தோணுச்சு .வர்க்கமும் ஜாதியும் ஒண்ணா பயணிக்குது .மேற்கு தொடர்ச்சி மலையில தோட்ட தொழிலாளி பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள்தானாம் .என்னோட இணையர் சொன்னாரு .அவங்க அம்மா கூட ஒரு காலத்துல தோட்ட தொழிலாளிதான் .ஆனா அந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம் சார் .வெறும் காசு மட்டுமே இங்க பிரச்னை இல்லையே சார் .சாதி தானே தலைமுறைகளா தொடரும் ஏழ்மைக்கு காரணம்.
இது ஒண்ணுதான் சார் .
மத்தபடி படம் அருமை .குறிப்பா சொல்லனும்னா அது பேசுற நிலம் சிறந்த அரசியல் .
நிலம் சார்ந்த அரசியலை எங்க வேணும்னாலும் பேசலாம் ஆனா அதை மேற்கு தொடர்ச்சி மலையின் பின்னனியில் சொன்னதுதான் முக்கியம் .
ஒரு நிலத்திற்கும் அதன் மனிதர்க்கும் உள்ள தொடர்பை ,நெருக்கத்தை காட்டவேண்டுமென்றால் அந்த நிலத்தை அவர்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் ,அந்த நிலத்தை அவர்கள் எப்படி லாவகமாகா கையாளுகிறார்கல் ,அந்த நிலத்தின் மூலை முடுக்கை அவர்கள் எப்படி இன்ச் இன்ச்சாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் ,அந்த நிலம் அவர்களோடு எப்படி வாழ்கிறதது, அவர்களை எப்படி கவனித்து கொள்கிறது போன்ற விஷயங்களை காட்சி படுத்த வேண்டும் .அந்த கோணத்தை பொறுத்தவரை நிலம் தொடர்பாக நான் பார்த்த படங்களிலேயே நிலத்திற்கும் மனிதனுக்குமான அந்த பந்தத்தை மிக மிக அருமையாக சொன்ன படம் மேற்கு தொடர்ச்சி மலை .
ஒரே ஒரு காட்சி போதும் .
ஏலக்காய் மூட்டையை கட்டிக்கொண்டு ஆறு பேர் மலைவழி நடக்கிறார்கள் .அந்த கூட்டத்தில் பெரியவர் பேசி கொண்டே நடக்கிறார் .அவர் கூடவே அந்த கேமரா மேலும் கீழும் ,மேலும் கீழும் அப்படியே போகிறது .அது தான் அந்த படத்தின் உச்சக்கட்டம் .
செட்டு போட்டா மட்டும் போதாது சார் .செட்ட யூஸ் பண்ணனும்.மேற்கு தொடர்ச்சிமலை அப்படிங்கிற இயற்கையான செட்டை டைரக்டர் முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிறார் சார் .
அவர் மட்டுமா ?
சார் தேனீ ஈஸ்வர் யார் சார் இவரு ?.....ப்பா !
ஏற்கனவே அவர் படம் ஒன்ன பாத்துட்டேன் .இது ரெண்டாவது . ரோமுக்கு கெடச்ச மைக்கேல் ஏஞ்சலோ போல தமிழ் சினிமாவுக்கு இவர் கெடச்சு இருக்காரு சார் .அசத்தல்.
ஹீரோ சொன்னதை செஞ்சு இருக்காரு சார் .ஆனா வலிக்கு ஓவர் ஆக்ட்டிங் பண்ண வேணாம் இயல்பான முகத்துல கூட சோகத்தையும் ,ஏமாற்றத்தையும் அசால்ட்டா காட்டலாம்னு ப்ரூவ் பண்ணிட்டாரு சார் .if underplay is an art he has excelled in it .
இளையராஜா பாடி இருக்க வேணாம் .ஏற்கனவே எங்கேயோ கேட்ட பீல் வந்துடுச்சு .இதே மலை சூழல் ,இளையராஜா குரல் .டக்குன்னு ஏற்கனவே பாத்த படத்தை ஞாபக படுத்திடுது .high risk factor in a movie like this .
சிறு சிறு பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இந்த படம் மிக அருமை .
தமிழ் இயக்குனர்கள் கதை சொல்லும் களங்களை மாற்ற வேண்டிய அவசியத்தை இந்த படம் அழுத்தி சொல்லுகிறது.
தமிழ் சினிமா எனும் மூட்டையை தன் தோள்களின் மேல் ஏற்றி தரையில் இருந்து மலை உச்சிக்கு தூக்கி சென்றிருக்கிறார் இயக்குனர் .வாழ்த்துக்கள் .
சொல்ல வந்த கருத்து நேர்மையாக ,மண்ணின் நடிகர்களை கையான விதம்,நாடகத்தனம் இல்லாமை போன்ற விஷயங்கள் இந்த படத்தை "fair trade " படமாக ஆக்கி இருக்கின்றன.இது ஒரு நியாய வர்த்தக படம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக