வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சேலம் அம்பேத்கார் சிலை உடைப்பு .. மக்கள மறியல் போராட்டம்

ஸ்ரீனிவாசன்tamilthehindu :
சேலம் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து, வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
சேலம், கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டியில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை உள்ளது. அந்த சிலையை நேற்று முன் தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து வெள்ளாளப்பட்டியில் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். தவகலறிந்து வந்த கருப்பூர் போலீசார், அம்பேத்கர் சிலை உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அம்பேத்கர் சிலை உடைப்பு பிரச்சினை சம்பந்தமாக சேலம் - பெங்களூரு சாலையில் விடுதலை சிறுத்தை அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், சேலம் - பெங்களூரு நெடுங்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக