திங்கள், 17 செப்டம்பர், 2018

உயர்நீதிமன்றம் எச் ராஜாவுக்கு அழைப்பாணை : பாசிசத்தையும் நாசிசத்தையும் எச்.ராஜாவின் பேச்சு வளர்க்கிறது

இதைத்தானே அந்த சோபியாவும் சொன்னார்? Bahanya  ONEINDIA TAMIL ON :சென்னை: நீதித்துறையை இழிவான

வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதுதொடர்பாக எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். 
வழக்கறிஞர்கள் கோபம் வழக்கறிஞர்கள் கோபம் நீதிமன்றத்தை இழிவாக பேசியதால், எச்.ராஜா மீது வழக்கறிஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
ஹுலுவாடி ரமேஷ் அமர்வு ஹுலுவாடி ரமேஷ் அமர்வு ஆனால் எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு எச் ராஜா குறித்து தாமாக விசாரிக்க மறுத்துவிட்டது.
அவர் மீது வழக்கு தொடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் 3 வழக்கறிஞர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 
அதேசமயம், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில் நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச் ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டாயமாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக விசாரிக்க மறுத்த நிலையில் சிடி செல்வம் அமர்வு புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்து, எச் ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக