செவ்வாய், 18 செப்டம்பர், 2018

நடிகை நிலானி : இயக்குனர் காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல ..

காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை  நிலானி  உருக்கம்
dailythanthi.com;சென்னை சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குன்னூரில் பதுங்கி இருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நிலானி, மீண்டும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.< இந்தநிலையில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய காதலனான வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார், நிலானியிடம் திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காந்தி லலித்குமார் உயிரிழந்தார். நட்பாக பழகியதை காந்தி லலித்குமார் தவறாக புரிந்துகொண்டு திருமணம் செய்ய வற்புறுத்துவதாக காதலி நிலானி கூறியதால் மனமுடைந்த காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.நானும் காந்தியும் சேர்ந்திருப்பது போன்ற படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். போட்டோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலானி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் நிலானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல .  காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கி செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன். மேலும் அவருக்கு மேலும்  பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக