சனி, 15 செப்டம்பர், 2018

நடிகை ஓவியாவுக்கு இலங்கையில் சிவப்பு கம்பள வரவேற்பு

Arul Rathinam :  ஈழத்தமிழர் அவலநிலை: செங்குருதி மண்ணில் ஓவியாவுக்கு
சிவப்புக்கம்பள வரவேற்பு!"
தமிழீழ விடுதலைப் போரில் சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை இழந்து, இப்போதும் தொடரும் திட்டமிட்ட இனஅழிப்பு சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் - ஈழத்தமிழர்கள் நடிகை ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்துள்ளனர். கொழும்பு மாநகரின் செட்டித்தெருவில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஓவியாவை காண பெரும் கூட்டம் திரண்டுள்ளது. நகை வாங்கினால் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவோர் நடிகை ஓவியாவுடன் சாப்பிடலாம் என்பதற்காகவும் பலர் நகை வாங்க முட்டிமோதியுள்ளனர்!
சிங்கள பேரினவாதிகளுடனான 30 வருட போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, கண், கை கால்களை இழந்து ஒரு நேர உணவுக்கு முன்னாள் போராளிகளும் மக்களும் அவதிப்படும் நிலையில் ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாபெரும் லட்சிய வாதங்களை பேசிக் கொண்டிருப்போருக்கு - எந்த அடித்தளத்தின் மீது நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்த இதுபோன்ற நிகழ்வுகள் பயன்படக்கூடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக