ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

சமுகவலை பதிவாளர்களை குறிவைக்கும் எடப்பாடியின் சைபர் கிரைம் அராஜகம் .. கருத்து சுதந்திரத்தை காலில் ..

.puthiyathalaimurai.com :தமிழக முதலமைச்சரை
இழிவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைமில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த திங்கள்கிழமை முதல் தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்தி, மீம் என்ற பெயரில் இழிவாக சித்தரித்து பரப்பியதாகவும், அது முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை வேண்டுமென்றே சில நபர்கள் திட்டமிட்டு செய்வதாகவும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக  Thalapathy Jaga (@ThalapathyjaGa5), Hari Prabakaran (@HariIndic), Doha Talkies (@dohatalkies), Meena (@Meena0hrd), #AdmkFails (@admkfails), Mahesh (@Mahesh_SPK) and RajaBekarChem (@RajasekarAsho7) இந்த கணக்கில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது


கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் , IPC 504, IPC 505(1)(b), 505(2), IPC 506 (1) மற்றும் IPC 507ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்வேறு பெயர்களில் செயலபடும் இந்த சமூக வலைத்தள கணக்குகளை பராமரிப்பது யார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக