ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

சென்னை மெட்ரோ கூரை டைல்ஸ் விழுந்து ஒருவர் காயம்

மெட்ரோ: மேற்கூரை விழுந்ததில் பெண் படுகாயம்!மின்னம்பலம் :சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கீழே விழுந்ததில் நேற்று (செப்டம்பர் 29) பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கீழே விழுந்தது. விஜயா என்பவர் தனது கைக்குழந்தையுடன் ரயிலில் இருந்து இறங்கியபோது, ரயில் அதிர்வு காரணமாக டைல்ஸ் உடைந்து விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்தார் விஜயா. அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவரது குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து அமைந்தகரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் முதன்முறையாக இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. “சென்னை விமான நிலையத்தில் கூரை கீழே விழுந்தது போலத் தொடர்கதை ஆகாமல், உடனயாக இன்னொரு விபத்து நடக்காவண்ணம் மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக