வியாழன், 13 செப்டம்பர், 2018

தமிழகம் மார்வாடிகள் கையில்? .. கோவை நாளேட்டில், இந்தியில் முழுப்பக்க விளம்பரம்

கோவை இந்து நாளேட்டில் இந்தி விளம்பரம் முழுப்பக்கம்
அக்சயமணி பதிப்பகம்  : தமிழக மாவட்டங்களின் வியாபாரம்... ஓர் அலசல்
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சமூகத்திடமும், முஸ்லிம்கள் வசமுமிருந்த சிறு, குறு வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டு மார்வாடிகள் கைப்பற்றி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அன்று வட்டிக் கடையில் ஆரம்பித்து இன்று அனைத்து துறையிலும் வேகமாக வளர்ந்து வரும் வட மாநிலத்தவர்கள், முன்பு சென்னை, மதுரை, கோவையை மையமாக வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில், நேரடியாக சில்லறை வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான கடைகளை விலைக்கு வாங்கி விடுகின்றனர்,
தற்பொழுது முக்கிய சாலைகளில் உள்ள ரோட்டின் பெரும்பாலான வியாபாரம் மார்வாடிகள் கையில். பேல்பூரி, பானிபூரி தொடங்கி, பனியன் கம்பனி, கட்டிட வேலை, தொழிற்சாலை வேலையில் அதிக பேர் உள்ளார்கள், முன்பு ஜவுளி வியாபாரத்தில் கவனம் செலுத்திய குஜராத்திகள் கையில் தற்போது நகரின் பிளைவுட் வியாபாரம், செருப்பு மற்றும் பேக்ஸ் வியாபாரம், எலக்டிரிக்கல், சானிடரி மற்றும் பிளம்பிங் வியாபாரம், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் வியாபாரம்,
பிரமாண்டமாக ஸ்டேசனரி வியாபாரம், பரிசு பொருட்கள் வியாபாரம் டிஸ்போசபிள் கப் பிளேட் வியாபாரம் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 விலை குறைவாகவும் சீனா தயாரிப்பு பொருட்களையும் மார்வாடிகள் விற்பனை செய்வது காரணமாக பொருளின் தரத்தை பற்றி கவலைப்படாதவர்கள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் இவர்களின் நிறுவனங்களில் உள்ளூரைச்சேர்ந்த ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்குவது கிடையாது. புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களில் கேட்கும் அட்வான்ஸ் மற்றும் வாடகை கொடுத்து இவர்கள் கடை எடுப்பதால் சிறிய முதலீட்டில் வியாபாரம் துவங்க முயற்சிக்கும் உள்ளூர் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தவிர்த்து மார்த்தாண்டம், கருங்கல், குலசேகரம் புதுக்கடை களியக்காவிளை என்று ஒவ்வொரு ஊரிலும் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். பல்லாண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கவலைக்குரிய விசயம் காரணம் அவர்களோடு போட்டி போட்டு வியாபாரம் பண்ண முடியாது என்ற எண்ணம் வந்து விட்டது,
வடமாநிலத்தவரின் ஆதிக்கம் வருங்காலத்தில் தமிழ் நாட்டில் மேலும் அதிகரிக்கும், வருங்காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயம் செய்யும் அளவிற்க்கு வலிமை அடைந்தாலும் ஆச்சரியமில்லை! Posted by அக்சயமணி பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக