ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை - அமைச்சர் ஜெயக்குமார்

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை - அமைச்சர் ஜெயக்குமார் சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு இன்றே பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்வார். மேலும், சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டவும், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக