செவ்வாய், 11 செப்டம்பர், 2018

உயர்நீதிமன்றம் : 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும்

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் - சென்னை ஐகோர்ட் எச்சரிக்கைமாலைமலர் :சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. # சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் மக்களின் நிலை புரியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக