செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதிர்காலத்தில் பெட்ரோல் ரூ.55, டீசல் 50 க்கு விற்கமுடியுமாம்..நிதின் கத்காரி

Nitin Gadkari
Petrolவெப்துனியா: இந்தியாவில் பெட்ரோல் மற்றும்
டீசல் விலை நாளுக்கு நாள் விஷத்தை விட வேகமாக ஏறிக்கொண்டே வருகிறது. இப்படியே போனால் இன்னும் ஒருசில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் பொதுமக்கள் பெருந்துயரில் உள்ளனர். நேற்று இதன்காரணமாக நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை பொதுமக்களுகு குறைவாக கிடைக்க எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும் என்றும் இதற்காக 5 ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் என்றும் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார். ஆனால் இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் டீசல் எப்போது விற்பனைக்கு வரும் என்பதும், அப்படியானால் எத்தனால் இல்லாத பெட்ரோல், டீசல் விலை குறையாதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக