புதன், 26 செப்டம்பர், 2018

தஞ்சை சாஸ்திரா 58.17 ஏக்கர் ஆக்கிரமிப்பு .. காலி செய்யாவிட்டால் இடிக்க உத்தரவு!

Shankar A : சட்டவிரோதமாக தஞ்சையில் ஆக்ரமிக்கப்பட்ட தமிழக சிறைத்
துறைக்கு சொந்தமான 58.17 ஏக்கர்களில், கட்டப்பட்ட சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கட்டிடங்களை, காலி செய்து கிளம்பா விட்டால், 3 அக்டோபர் அன்று அந்த கட்டிடங்கள் காவல்துறை உதவியோடு இடிக்கப்படும் என்று, சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்.
சவுக்கின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி. இந்த விவகாரத்தில், தொடக்கம் முதலே, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுக்கு எதிராகவும், சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார் என்பதை சவுக்கு தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது.
ஒரு கட்டத்தில் திறந்த வெளி சிறை கட்டும் இடம் என்று சிறைத் துறை கோரிக்கை விடுத்தபோது, அந்த இடத்தை விட்டுடலாம்மா. அரசு நிலம் என்று எடப்பாடி சொன்னபோது, புதுக்கோட்டையில் அவர்கள்தான் வேறு நிலம் தருகிறார்களே அதை எடுத்துக் கொள்ளலாம், கைதிகள் எங்கு இருந்தால் என்ன, என்று எடப்பாடியிடமே திமிர்த்தனமாக வாதிட்ட பாவப்பட்ட பாப்பாத்திதான் கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தை பொது வெளிக்கு கொண்டு வந்து, கிரிஜாவின் முகத்திறையையும் கிழித்ததில், பல உயர் உயர் அதிகாரிகள் மற்றும், ஒரு பத்திரிக்கையாளர் உண்டு. அவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் பெயர் வெளியிடப்படவில்லை.
எல்லா பத்திரிக்கையாளர்களுமே, கோலமாவு சந்தியாக்கள் போல ப்ரோக்கர்கள் இல்லை.
நன்றி. இது கொண்டாட்டமான தருணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக