tamiloneindia - Sutha :சென்னை:
தமிழக உயர்
கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் உயர் கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த சுனில் பாலிவால் மாற்றப்பட்டுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அரசு இன்று பல முக்கிய துறை அதிகாரிகள், கலெக்டர்களை மாற்றியுள்ளது. அதில் முக்கியமானவர் சுனில் பாலிவால். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வித்துறை செயலாளராக இருந்து வந்தார். இன்று அவர் மாற்றப்பட்டுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன சர்ச்சை, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் பாலியல் வற்புறுத்தல் புகார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா மீதான புகார்கள், திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தங்கப் பாண்டியன், மைதிலி மற்றும் புனிதா மீதான பரபரப்பு பாலியல் புகார்கள் என மோசடிகள் நீண்டு கொண்டே போகின்றன.
இன்னும் வெளியில் வெடித்துக் கிளம்பக் காத்திருக்கும் மோசடிகளும் அதிகம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் உயர் கல்வித்துறையின் செயலாளரான சுனில் பாலிவால் மாற்றப்பட்டுள்ளார்.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக