வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

கோபாலபுரத்தில் உதயநிதியின் அடாவடி ஆரம்பமா? சீனியர்களை மதிக்காத .. வாரிசுகள்?

தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மு.க.அழகிரிக்கும் -ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அதிகாரப்போட்டியல்ல. அவர்களது மகன்களுக்கான இருப்பிடத்தை இப்போதே உறுதி செய்து கொள்வதற்கான முன்னேற்பாடு என்றே கூறி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவர்களது பேரன்களான தயாநிதி அழகிரியும், உதயநிதி ஸ்டாலின் தத்தம் தந்தைகளை இயக்கும் கருவியாக மாறி விட்டனர். அவர்களிருவரும் இப்போதே கோஷ்டிகளை உருவாக்குவதிலும், செயல்பாடுகளிலும் நான்கு கால் பாய்ச்சல் காட்டி வருகின்றனர்.
''இனிமேல் இவர்கள் மட்டும்தான் தி.மு.க போல நடந்து கொள்கிறார்கள். இது அஞ்சலி செலுத்த வரும் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் இல்லத்திலும் இவர்களது ராஜ்ஜியம்தான் நடக்கிறது. இப்போது கோபாலபுரத்திற்கும் வந்து விட்டார்கள். இதுபற்றி ஸ்டாலிண்டம் எப்படிக்கூறுவது எனத் தெரியவில்லை'' என கலங்குகிறார்கள் உடன்பிறப்புகள்.
அன்பில் மகேஷும், டி.ஆர்.பி ராஜாவும் எம்.எல்.ஏக்களாகவும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக