புதன், 22 ஆகஸ்ட், 2018

அழகிரி :பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்

கருணாநிதி சமாதியை நோக்கிய பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் - மு.க அழகிரி மாலைமலர்:  செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கலைஞார்சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தெரிவித்துள்ளார். மதுரை: திமுக தலைவர்  மறைவுக்கு பின்னர், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க அழகிரி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கலைஞர்  சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார். இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர்  சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக