வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

போக்கிலிகளின் கடைசி புகலிடம் தமிழ் தேசியம் +இந்துத்வா ... ஹீலர். ஈமு,, நம்முன்னோர்கள் கோஷ்டி .... ஆர்கானிக் ... மாட்டுமூத்திரம்

Ashok.R : இன்று கொலைகாரன் ஹீலர் பாஸ்கருக்கு ஆதரவாக கொடி த்து வைத்த ஆர்கானிக் மாஃபியா, ஹீலர் பாஸ்கர் போன்ற மரபு மருத்துவ கும்பல், செம்மைவனம் செந்தமிழன் போன்ற இயற்கை மருத்துவ, தடுப்பூசி மறுப்பு கும்பல், பாரிசாலன் போன்ற சாதிவெறி கும்பல் என சமூகவிரோத செயல்களை எல்லாம் தமிழ் என்கிற பெயரில் விற்கும் அத்தனை பேரும் தமிழ்தேசியம் என்கிற குடையில் ஒன்றாக கூடுவார்கள்.
பிடிக்கிறவர்கள் எல்லாம் யார்? ஒரு கையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டே, இன்னொரு கையில் ‘தமிழ் மரபு’ என்ற பெயரில் வீட்டில் பிரசவம், தடுப்பூசி மறுப்பு, மருந்து மறுப்பு என உயிர்கொல்லி மூடத்தனங்களை விற்பனை செய்கின்றவர்கள். தமிழ் மரபு என்கிற வார்த்தையில் மயங்காமல் நீங்கள் ஒன்றை நிதானமாக
பொறுத்திப்பாருங்கள். ‘பஞ்சகவ்யம்’ (சாணி, மாட்டு மூத்திரம், பால், வெண்ணை, நெய் கலவை) சாப்பிட்டால் எய்ட்ஸ் குணமாகும் எனச் சொன்ன விஞ்ஞானி நம்மாழ்வார் ஆரம்பி
2009 காலகட்டத்திற்குப் பின் அயோக்கியப்பயல்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி குலாவும் ஒரு கூரையாக தமிழ்தேசியம் என்கிற வார்த்தை மாறிப்போய் இருக்கிறது. திராவிட அரசியல் முன்வைத்த அறிவியல், மூடநம்பிக்கை மறுப்பு, முற்போக்கு சிந்தனைகள் என அத்தனைக்கும் ஒரு மாற்றாக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். திராவிட அரசியலுக்கு எதிராக தமிழ்தேசியத்தை நிறுத்தும் ஆட்கள் யாரும் இந்த அயோக்கியத்தனத்தை கேள்வி கேட்பதில்லை. மக்களை மடையர்கள் ஆக்கி பணத்தையும், உயிரையும் பறிக்கும் கும்பல் எல்லா சமூகவிரோத செயல்களையும் ’தமிழ்’ என்கிற பெயரில் செய்வதைவிட ஒரு கேவலம் தமிழ்தேசியத்திற்கு இருக்க முடியுமா? தமிழ்தேசியம் என்பது என்ன? கற்காலத்திற்கு போய் கல்லுடைப்பதா? அம்மணமாகத் திரிவதா? தடுப்பூசியால் ஒழிந்துபோன போலியோ போன்ற நோய்களை தடுப்பூசி மறுப்பு பேசி உயிர்ப்பித்து தமிழ் குழந்தைகளை ஊனமாக்குவதா?

நான் அதனால்தான் இவர்களை குறிப்பிடும் போதெல்லாம் போலித்தமிழ்தேசியம் என மறக்காமல் குறிப்பிடுகிறேன். இந்த உண்மைகளைச் சொன்னால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழ்தேசியம் என்கிற சித்தாந்தத்தில் இருந்து இந்த அயோக்கியர்களை துரத்த, நீக்க உண்மையாகவே தமிழ்தேசிய அரசியலின் மேல் அக்கறை கொண்டிருப்பவர்கள் (அப்படி யாராவது இருந்தால்) நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்தேசிய அரசியலுக்கு அதைவிட ஒரு அழிவு, இழிவு வேறில்லை. ஆனால் என்ன செய்ய? வாய்கிழிய தமிழ்தேசியம் பேசித்திரியும் மணியரசனின் மகன் செந்தமிழன்தான் ஹீலர் பாஸ்கர் என்கிற அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்கி நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார்!! அரசு அடுத்ததாக தன்னை கைது செய்யுமோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம். இந்த கொலைகாரர்களின் மேல் வெறுமனே 420 சீட்டிங் கேஸ் மட்டும் போடாமல், அரசு இதுபோன்ற உயிர்க்கொல்லி சமூகவிரோதிகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அது ஒன்றே பெருகிவரும் இந்த ‘தற்கொலை மருத்தவத்திற்கு’ நிரந்தர தீர்வாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக