tamilthehindu : ஆந்திராவில்
22 முதல் 35 வயது வரையிலான
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பஞ்சாயத்து ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லோகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘முதல்வர்-யுவ நேஸ்தம்’ என பெயரிடப்பட்ட புதிய திட்டத்தின் படி, 22 முதல் 35 வயது வரையிலான வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இம்மாத இறுதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை வீட்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த புதிய திட்டத்தில் ஒரு வீட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக இம்மாதம் 4-வது வார இறுதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும்.
அரசின் கணக்கெடுப்பின்படி, ஆந்திர மாநிலத்தில் வேலையில்லா பட்டதாரிகள் 12 லட்சம் பேர் உள்ளனர். உதவித்தொகை பெற, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது பாலிடெக்னிக் படிப்பு படித்திருக்க வேண்டும். இத்திட்டத் துக்கு ஆண்டுக்கு ரூ.8,000 கோடி வரை செலவாகும். வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவதுடன் பணிக் கான பயிற்சி முகாம்களும் அரசு சார்பில் நடத்தப்படும். ஆந்திர மாநிலத்தில் புதிதாக 721 நிறு வனங்கள் தொழில் தொடங்க முன் வந்துள்ளது. இவை ரூ.1.49 லட்சம் கோடி முதலீடு செய்ய வுள்ளன. இதில் ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்கி விட்டன. இதன் மூலம் மாநிலத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இவ்வாறு அமைச்சர் லோகேஷ் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக