Savithri Kannan :
ராகுல் காந்தி,கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த
போது,சரியான, முறையான,அவசியமான
பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ்காரர்கள் எல்லாம் ஆளாலுக்கு பொங்கி தெரித்த பிறகு, கடைசியாக, இப்பத்தான் தூக்கத்திலிருந்து எழுந்தவர் போல திருனாவுக்கரசர் அறிக்கை தந்திருக்கிறார்
.அதுவும், மதில் சுவரேறி குதித்து, குப்பையும், குழமுமான பகுதி வழியாக ராகுல் வெளியேறினார் என்று!
இதை கேள்விப்படும் போதே நமக்கு’,அடப் பாவிகளா? இவ்வளவு அலட்சியமா?’ என்று கோபம் வரும் போது, ஒரு காங்கிரஸ் தலைவருக்கு தார்மீகமான அறச் சீற்றம் உடனே வந்திருக்க வேண்டுமல்லவா...?

அது என்னவோ தெரியவில்லை..,.!
அன்றும் சரி,இன்றும் சரி காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ,தங்கள் தலைவர் பாதுகாப்பு குறித்து போதுமான அக்கரையின்றி இருப்பது மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது!
ராஜிவ்காந்தி தமிழ்னாட்டிற்கு வந்த காலகட்டத்திலும் அவர் பாதுகாப்பின்றி பட்ட அவஸ்த்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.அதற்கு நான் எடுத்த இந்த போட்டோகளே
நேரடி சாட்சி!
ராஜிவ்காந்தி காஞ்சிபுரம் விசிட் செய்த போது நான் எடுத்த புகைபடங்களே இவை!
ராஜிவ் கோயில் செல்வதற்க்காக சாலையில் நடந்த போது, அவர் கையை பிடித்து இழுத்தனர் சிலர், இடித்து தள்ளினர் சிலர்!
ஒரு மூதாட்டி ராஜிவ் காந்தியின் இரு கன்னத்தையும் அழுத்தி தழுவி உச்சி மோர்ந்தார்.அந்த போட்டோவை இங்கு நீங்கள் பார்க்காலாம்.
பெண்களை சந்தித்து பேச, என அவர் ஒரு அறைக்குள் நுழைந்த தருணத்தில், எதிர்பாராத விதமாக அவர் எதிர் கொண்ட அவஸ்த்தைகள் பேரதிர்ச்சி
தருபவையாக அமைந்தன.பெண்கள் ஆளாலுக்கு அவர் பக்கத்தில் வர போட்டி போட்டதன் விளைவால்,அவர் மீது சரிந்து விழுந்தனர்.ஒரு சிலர் அவரது கன்னத்தை கிள்ளினர்.
இவற்றை தவிர்க்க , அவர் மிகக் கடுமையாகப் போராடினார். ஆனால்,எதுவும் பலனளிக்கவில்லை.சில நிமிஷ போராட்டத்திற்கு பிறகு, பேச முடியாமலே , அவர் வெளியேற நேர்ந்தது.
திறந்த வேனில் நின்றவாறு, அவர் மக்கள் வரவேற்ப்பை ஏற்க முயன்ற போதும், அவரது வேனுக்கு அருகே அவரை இடித்து நெருக்கிய வண்ணம் சிலர் வந்து கொண்டே இருந்தனர்.
கோயில் பிரகாரத்திலுமே கூட,அவர் சுதந்திரமாக நடக்க சிரமப் பட்டார்.
இப்படியெல்லாம்,அவர் பாதுகாப்பு விஷயத்தில் காட்டிய அலட்சியம் தான் தமிழகத்தில் அவர் உயிர் பறிபோனதற்கே காரணமாயிற்று.அதிலிருந்து இன்னும் பாடம் பெற மறுப்பவர்களை என்னென்பது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக