ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

1989 முதல் 1991 வரை = 99,000 வீடுகள்.. திமுக ஆட்சியில் கட்டப்பட்டன

Don Vetrio Selvini : கலைஞர் அவர்களால் 'தாட்கோ' எனப்படும் 'தமிழ்நாடு ஆதி
திராவிடர் வீட்டு வசதி வாரியம்' 1974ல் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவது இந்த நிறுவனத்தின் முக்கியமான பணியாகும். தற்போது இன்னும் விரிவடைந்து லோன் மற்றும் பல்வேறு கொடுப்பது முதல் திறன் வளர்ப்பு என்று பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
ஒரு ஒப்பிட்டிற்கு, 1974 முதல் 1991 வரை கட்டிய வீடுகளின் எண்ணிக்கை பின்வருமாறு.
#1974 முதல் 1975 வரை = 30,022 வீடுகள் ( திமுக)
#1975 முதல் 1989 வரை = 36,361 வீடுகள் (அதிமுக)
#1989 முதல் 1991 வரை = 99,000 வீடுகள் (திமுக) .
திமுக ஆட்சியில் ஒரு வருடத்தில் கட்டிய வீடுகளை, அதிமுக ஆட்சி 10 வருடங்களில் கட்டியிருக்கிறது.அவ்வளவு அலட்சியம்.
அதிமுக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் இருண்டகாலம் என்று சும்மாவா சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக