புதன், 22 ஆகஸ்ட், 2018

தலித் மாணவி கல்லால் அடித்து கொலை. பாலியல் வழக்கை மீளப்பெற மறுத்ததனால் .. பாஜக ஆளும் மத்திய பிரதேசம்

Dalit woman student stoned to death for not withdrawing sexual-harassment case
தீக்கதிர் : பாலியல் வழக்கை வாபஸ் பெறாத மாணவி கல்லால் அடித்துக் கொலை
சியோனி, ஆக. 21 -
பாலியல் துன்புறுத்தல் வழக்கை வாபஸ் பெறாத கல்லூரி மாணவி, பொதுமக்கள் முன்பாகவே கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் படித்து வந்தார்.
இவரை அனில் மிஸ்ரா (38) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். ஒருகட்டத்தில், தனக்கான பாலியல் துன்புறுத்தல் பற்றி, பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இது அனில் மிஸ்ராவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுமாறு மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் திங்களன்று மாணவி கல்லூரிக்கு சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அனில் மிஸ்ரா, மாணவியின் முடியை பிடித்து இழுத்து சாலையோரம் தள்ளி, அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி மாணவி மீது போட்டுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து சிலர் அனில் மிஸ்ராவை மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன், படுகாயம் அடைந்த மாணவியையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டார். போலீசார் தற்போது அனில் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
A 23-year-old student was killed here yesterday after she was dragged by her hair while on her way to college and her head smashed with a stone by a man who was allegedly putting pressure on her to withdraw the sexual harassment complaint against him, police said.

The incident took place around noon when the Dalit student was walking to the Netaji Subhash Chandra Bose Government Girls College here - around 350 km from Bhopal, police officials said. Narrating what had happened, they said the accused, 38-year-old Anil Mishra, got down from his motorcycle and dragged the woman to the roadside by her hair.

He allegedly pushed the victim to the ground and smashed her head with a big stone lying nearby, said Kotwali police station in-charge Arvind Jain. Some people rushed to help and overpowered Mishra.
The woman, who was seriously injured and bleeding profusely, died while being taken to a hospital, Jain said. Mishra, who has been arrested, prima facie committed the crime as the victim refused to withdraw the sexual harassment case against him, said K K Verma, Seoni sub-divisional officer (police) Both are residents of a village in Seoni district, Verma said, adding that further investigation is on.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக