சனி, 4 ஆகஸ்ட், 2018

எளியவர்களின் வலிமையே திராவிடம்.,,, ஷாலின் மரியா லாரன்ஸ்

இதை எழுத கூடாது என்று பலமுறை எனக்கு நானே
சொல்லிக்கொண்டேன். ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை.
இன்று மதியம் இந்த புகைப்படங்களை பார்த்ததில் இருந்தே மனது இதை சொல்லியே ஆக வேண்டும் என்று அடித்து கொண்டிருக்கிறது.
இலவச பிரியாணி கேட்டு கிடைக்கவில்லை என்கிற ஆத்திரத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகியால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட அந்த எளிய மனிதர்களை பார்த்து ஆறுதல் கூற திரு ஸ்டாலின் அவர்கள் நேரிடையாக சென்றிருக்கிறார்.சரி.நல்லது.
இதை நேர்மறை கண்ணோட்டத்தோடு பார்க்க விரும்பவில்லை.ஆங்கிலத்தில் சொல்லுவது போல "IT was a really good gesture" .
இந்த புகைப்படத்தை பார்த்தால் ஒரு விஷயம் தெரியும். அது திரு ஸ்டாலின் அவர்களின் முகத்தில் ஒரு சின்ன சங்கோஜம் தெரிகிறது..ஒரு guilty feel... தன் கட்சியை சேர்ந்தவர் தவறு செய்துவிட்டார் அதற்காக ஸ்டாலின் வருந்துவது முகத்தில் நன்றே தெரிகிறது.

ஆனால் இந்த புகைப்படங்களில் நாம் காணாமல் விட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அடி வாங்கிய அந்த அப்பாவி ஹோட்டல் ஊழியர் கைகளில் இருக்கும் பையில் உள்ள பச்சை கலர் பொன்னாடை தான் அது.

தன்னை பார்க்க ஸ்டாலின் அவர்கள் வருகிறார்கள் என்றதும் வாங்கிய அடிக்கு கொஞ்சம் கூட காழ்புணர்ச்சியோ கோவமா இல்லாமல் அந்த வேளையிலும் ஸ்டாலினுக்காக பொன்னாடை ஒன்றாய் வாங்கி வந்திருக்கிறார் அந்த விளிம்பு நிலை மனிதர்.
இவர் தான் திமுகவின் சராசரி ஆதரவாளர்.
இவர் கட்சியில் உறுப்பினராக இருக்க மாட்டார்,சமூக வலைதளங்களில் இயங்க மாட்டார் ஆனால் டீ கடையில், கடைத்தெருவில்,இரவு வீட்டின் சந்தின் மூலையில் யாருடனாவது திமுகவின் பலம் ,கலைஞர் என்று விவாதித்து கொண்டிருப்பார்.
இவருக்கு மூன்றாம் கலைஞரை தெரியாது ஆனால் தனது மூன்றாம் தலைமுறையும் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டும் என்று நினைப்பவர்.
இவர்கள்தான் இந்த மாநிலத்தில் திமுகவின் ஆணி வேர்கள்.
ஆனால் திமுகவில் யுவராஜ் போன்ற ஹிந்துத்துவா சக்திகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட இந்த சாமானிய திமுக காரனுக்கு கிடைக்காது.
கடந்த தேர்தலில் போது கள பணியாளர்கள் சொன்ன முக்கிய குற்றச்சாட்டு.மாவட்ட நிர்வாகிகளுக்கு கிடைக்கும் மரியாதை சாதாரண தொண்டனுக்கு கிடைப்பதில்லை என்பதே.
இன்று திமுகவின் வாரிசுகள் சுக போகமாக வாழ முடிகிறதென்றால் இந்த சாமானிய மனிதர்கள்தான் காரணம்.
Party does not make people ,people make a party.
இணையத்தில் கூப்பாடு போடும் உடன்பிறப்புகள் ,நிர்வாகிகள் இவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையில் ஒரு துளி இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அந்த மரியாதையை கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மனதில் சுமந்து கொண்டு அதை செயலில் காட்ட வேண்டும் என்பதனை கட்சி நிர்பந்திக்க வேண்டும்.
இந்த சாமானிய தொண்டர்களின் நலனுக்காக தீய சக்திகளை கட்சிக்குள் வர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதுதான் திராவிடம் 2.0
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக