புதன், 29 ஆகஸ்ட், 2018

ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்த ஸ்டாலின்: குடும்பத்தில் குதூகலம்

வெப்துனியா  :இன்று காலை நடந்த பொதுக்கூட்டதில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் அக்கட்சி பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை திமுகவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் மரணத்திற்கு பின்னர் தயாளு அம்மாள் மற்றும் ராஜாத்தி அம்மாள் என இரு குடும்பங்களும் நெருக்கத்துடன் பழகுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம், இன்று ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் கோபாலபுரம் சென்று தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்று, அங்குள்ள கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.அதன் பிறகு, சிஐடி காலணி சென்று, ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக கனிமொழியும் ஸ்டாலினுடன் அதிக நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக