செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எடப்பாடி தகராறு செய்கிறாரா? நிதின் கத்காரி சென்னையில்தான் ..

மின்னம்பலம் : திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக நேற்று (ஆகஸ்டு 6) காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சென்னையில்தான் இருக்கிறார்.
பிரதமரிடம் இருந்து கிடைத்த சில அறிவுறுத்தல்கள் காரணமாகவே அவர் சென்னையில் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. நேற்று (ஆகஸ்டு 6) டிஜிட்டல் திண்ணை பகுதியில் ‘ திமுக வைத்த சில வேண்டுகோள்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி எதிர்வாதம் செய்வதாகவும், ஆனால் பிரதமர் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம். அது தொடர்பாகவே நிதின் கட்கரியின் சென்னை பயணம் இருக்கிறது என்கிறார்கள்.
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. இந்தியாவிலேயே எட்டு வழிச் சாலை மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து தமிழகத்துக்கு கிடைப்பதற்கு இந்த நட்பும் புரிந்துணர்வும் கூட காரணம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமியிடம் சில விஷயங்களைப் பேசுவதற்காக கட்கரி அனுப்பப் பட்டிருக்கிறார்.

இன்று கட்கரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் உள்ளிட்டோர் சந்திக்கலாம் என்றும் அப்போது மத்திய அரசின் சில அறிவுறுத்தல்களை எடப்பாடியிடம் நிதின் கட்கரி தெரிவிப்பார்’’ என்றும் சொல்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக