மாலைமலர் :ராசிபுரத்தில் திருமண விழாவிற்கு வந்த
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் தனிக்கட்சி தொடங்க திட்டமா?
என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
ராசிபுரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கேள்வி:- சென்னையில் நடைபெறும் பேரணி எந்த அளவிற்கு வெற்றி தரும்?
பதில்:- இந்த பேரணி வருங்காலத்தில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தரும்.
கே:- தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப:- தி.மு.க.வை பற்றி தன்னிடம் கேட்காதீர்கள், தற்போது தி.மு.க.வில் நான் இல்லை.
கே.:- உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன?
ப:- நான் ஏற்கனவே சொன்னதை போல எனது ஆதரவாளர்கள் மற்றும் கலைஞரின் உண்மை விசுவாசிகளிடம் கலந்து பேசி மேற்கொண்டு என்ன செய்வது என முடிவு எடுப்போம்.
கே.:- தனிக்கட்சி தொடங்குவீர்களா?
ப:- அது பற்றி இப்போது சொல்ல முடியாது.
கே:- உங்களின் ஆதங்கத்தை எப்போது சொல்வீர்கள்?
கே:- கலைஞர் தலைவராக இருந்த இடத்தில் மற்றொருவரை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?
ப:- பிறகு பேசி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ப:- அதற்கெல்லாம் காலம் வரும். அப்போது பதில் சொல்வேன்.
ப:- பிறகு பேசி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக