மாலைமலர் :முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆக.31 வரை 139.9
அடியாக தொடர்ந்து பராமரித்திட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி, கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.
மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.< இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது. இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
முல்லைப்
பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆக.31 வரை 139.9 அடியாக தொடர்ந்து பராமரித்திட
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின்
நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர்
தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வழக்கு விசாரணை
செப். 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு வழக்கு விசாரணை செப். 6-ம் தேதிக்கு
ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி, கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.
மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.< இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது. இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேரளாவில் மேற்கொள்ளப்படும்
மீட்புப்பணிகள், புனரமைப்பு பணிகள், மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள்
குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யதார்.
அந்த பிரமாணபத்திரத்தில்,
கடந்த
15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று
இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இடுக்கி அணையில்
இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது.
இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
முல்லைப்
பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம்,
கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு
இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை
திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும். என கூறி இருந்தது.
இதற்கு
இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல. இடுக்கி பகுதி
வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம். முல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளை
திறந்து விட்டது கேரள அரசுதான் என கூறி உள்ளது. ஆக.15ல் முல்லைப்
பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, அணையிலிருந்து இடுக்கி அணைக்கு 1.24
டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது; ஆனால் அன்று கேரளா அரசு இடுக்கி அணையில்
இருந்து 13.79 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது கேரள வெள்ளத்துக்கு
தமிழகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக.14 முதல் 19 வரை
இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே
கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம். ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு
அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம்
ஏற்பட காரணம் என கூறபட்டு உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக