செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

திமுக பொதுக்குழு கூடுகிறது .. தலைவர் பொருளாளர் பதவிகளுக்கு ..... பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவிப்பு

திமுக பொதுக்குழு அறிவிப்புக்கு பிறகு கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின்மாலைமலர்: தி.மு.க பொதுக்குழு வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கூடும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவித்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை : திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 6-ம் தேதி காலமானார். இதனை அடுத்து, சமீபத்தில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி மட்டும் பேசப்பட்டது. தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, அடுத்தவாரம் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார். இதில், கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொதுக்குழு கூட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் செல்வி, மு.க.தமிழரசு, துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் அருள்நிதி ஆகியோரும் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக