புதன், 25 ஜூலை, 2018

திமுகவில் கிச்சன் கபினெட் ? எல்லா மாவட்டங்களிலும் ?

திமுகவின் ஒரு பிளேன்டீ தொண்டன்
நக்கீரன் :  ஸ்டாலின் களையெடுப்பு என்று
சமீபத்தில் வெளியான புதிய
நியமனங்கள் அனைத்துமே மொத்தமாக பெயில் ஆகி, எதிர்பார்த்ததற்கு மாறாக புதிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். குறிப்பாக கலைஞரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த, தங்கள் பகுதியின் மிக முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட திண்டுக்கல் ஐ.பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள்கூட பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல், தங்கள் பகுதிக்குள்ளேயே ஒடுங்கிக்கிடக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.
எல்லா மாவட்டத் திமுகவிலும் சபரீஷன் மூக்கை நுழைக்கிறார் என்ற புலம்பல் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவழித்த நிலையில், திடீரென அவரை மாற்றிவிட்டு, வயதான கம்பம் ராமகிருஷ்ணனை மாவட்டச் செயலாளராக நியமித்தார்கள். இப்போது, அவர் கட்சிக்காரர்களை நெருங்கவிடாமல், வசூல்வேட்டையைத் தீவிரப்படுத்தி இருக்கிறாராம். சால்வைக்குப் பதிலாக 100, 200 ரூபாயை கையில் கொடுக்கும்படி கேட்கிறாராம். பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன். நாங்கள்தான் அடுத்த ஆளும்கட்சி என்றும், செய்திகளை கவனமாகப் போட்டால் விளம்பரங்கள் கொடுக்க ஏற்பாடு செய்வேன் என்கிறாராம்.

திமுகவில் எப்போதுமே கோஷ்டிகள் இருக்கும் என்றும், எல்லாக் கோஷ்டிகளுக்கும் கலைஞரே தலைவராக இருப்பார் என்றும், திமுகவின் வெற்றி என்று வரும்போது எல்லாக் கோஷ்டிகளும் இணைந்து செயல்படும் என்றும் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது கனிமொழி கோஷ்டி, அழகிரி கோஷ்டி, மாவட்டச் செயலாளர் கோஷ்டி, மாவட்டச் செயலாளருக்கு எதிரான கோஷ்டி, உதயநிதி கோஷ்டி என்று கணக்கற்ற கோஷ்டிகள் இருப்பதாக வேதனைப் படுகிறார்கள்.
https://nakkheeran.in/special-articles/…/kitchen-cabinet-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக