செவ்வாய், 17 ஜூலை, 2018

ஐடி ரெய்டு நாடகம்.. பேரம் படியாததால் கெடுபிடி விரைவில் எல்லாம் சுபம்!

Troll Trousers 2.0 : ஐடி ரெய்டு என்னும் நாடகம்..
இன்று EPS OPS ஆட்சியில் மிகவும் பலம்வாய்ந்த மிகவும் நெருக்கமாக உள்ள கடந்த ஒரு வருடமாக பல நெடுஞ்சாலை காண்டிராக்ட் பெற்ற SKP நிறுவனங்களில் இன்று 130 கோடி பணம் ரொக்கம் கைப்பற்றி, 670 கோடி ஆவணங்கள் பறிமுதல்
பிஜேபி மோடி ஆட்சி ரெய்டெல்லாம் ஊழலை ஒழிக்க அல்ல.. மிரட்டி, பேரத்தை முடிக்கதான்னு ஊருக்கே தெரியும்டா...
கரூர் அன்புநாதன், ஓபிஎஸ் & ஈபிஎஸ் பினாமி சேகர் ரெட்டி போன்றவர்களிடம் நடத்திய வருமானவரி சோதனையின் முடிவில் என்ன நடந்தது?? கண்டுபிடிகப்பட்ட பல நூறு கோடிகணக்கான ரூபாய்கள் & கிலோக்கணக்கிலான தங்கம் போன்றவற்றின் கதி என்ன??
ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியிடம் அச்சிடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே கைப்பற்றப்பட்ட 33.60 கோடி மதிப்பிலான புத்தம் புதியதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் (1,68,000 ரூபாய் தாள்கள், 1,680 பண்டல்கள்) எந்த வங்கியில் இருந்து மாற்றி வாங்கப்பட்டன என கண்டுபிடிக்க முடியாது.. - மத்திய ரிசர்வ் வங்கி RBI நீதிமன்றத்தில் சொன்னதே... அப்படியானால், கருப்பு பணத்தின் பாதுகாவலர் யார்? இரெட்டை வேடம் போடுவது யார்?? அரசியல் காரணங்களுக்காக மத்திய வருமானவரி துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை பயன்படுத்துவது யார்??
அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்ல ரெய்டு நடத்தி., கட்டுக் கட்டா பணம் எடுத்தீங்க... என்ன நடவடிக்கை எடுத்தீங்க.?
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்ல ரெய்டு நடத்தி., கத்தை கத்தையா ஆவணங்கள் பறிமுதல் செஞ்சீங்க... என்ன நடவடிக்கை எடுத்தீங்க.?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்குள்ள போய் ரெய்டு நடத்தி பல ஆவணங்களை எடுத்திட்டு போனீங்க... சசிகலா & தினகரன் குடும்பத்தினர் மற்றும் ஜெயாவால் துவக்கப்பட்ட ஜெயா டிவி, நமது எம்ஜியார், ஜெயா ஓய்வெடுத்த கொடநாடு போன்ற 1800 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துனாங்க,
என்ன நடவடிக்கை எடுத்தாங்க.? பல இலட்சம் கோடி ஆவணங்கள் கைப்பற்றி என்ன ஆனது
இவனுக ரெய்டு பண்றது எல்லாம் ஊழல் ஒழிப்பு, நேர்மை..... அப்படின்னு ஈர வெங்காயம் எல்லாம் இல்லை.... ஏதாவது சிக்குனா அதை வச்சி சம்மந்தப்பட்ட நபர்களை மிரட்டி... தங்களுக்கு தேவையான விஷயங்களை சாதித்துகொள்ள தான். கடைசியில கொஞ்சம் கமிசனும் கை மாறும். ரெய்டு சம்மந்தப்பட்ட அணைத்து கோப்புகளும் காணாமல் போகும்... அம்புட்டு தான் விஷயம்.... புறவாசல் பாஜக... 😂
போங்கடா.... நீங்களும் உங்க ரெய்டு நாடகமும்......
#shared

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக