சனி, 21 ஜூலை, 2018

மோடியின் அழுகை கண்ணீர் சோகம் ஏழை தேசபக்தி ... நீ ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறே..

ஆலஞ்சியார்: ஏழைத்தாயின் மகன்.. ஏதோ சினிமா டைட்டில் போல இருக்கிறதா..
ஆம் நாம் "ஒருதாய் மக்களை" எல்லாம் பார்த்தவர்கள் தாம் ..
இந்த அழுகை .. பதைபதைப்பு .. கண்ணீர் .. சாவு சோகம்.. இரக்கம் இதெல்லாம் அரசியலில் பேசுகிற செய்கிறவர்கள் தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்கள்.. நான் பெண் என்பதால் .. கைகாசை செலவு செய்து மூக்குத்தியை அடமானம் வைத்து என்றெல்லாம் கதைத்தவரை நம்பியதால் தமிழகம் படுகிற அல்லல்கள் சொல்லி மாளாதவை..
..
என்ன பேசியிருக்கவேண்டும் பிரதமர் அடுக்கடுக்கான குற்றசாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலளிக்காமல்
காங்கிரஸை ஆட்சியை பிடிக்க எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கிறது. பதவி ஆசையால் பேசிகிறார் என்றெல்லாம் உளறுவதிலிருந்தே சரியான விளக்கம் தர முடியவில்லையென தெரிகிறது .. எல்லா அரசியல் தலைவர்களும் பதவிக்கு வரதான் ஆசைபடுவார்கள் ..ஆனால் அதை ஊர்சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பாக கொள்ளாமல் மக்களுக்கு ஏதேனும் நம்மால் செய்திட முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்

ஏழைமகன் அதனால் ராகுலின் கண்களை பார்க்க முடியவில்லையென்பது ஒருவகை தாழ்வுமனபான்மை.. நெஞ்சில் நேர்மையிருந்தால் நேர்கொண்ட பார்வை தானாக வரும் .. இதில் ஏழை எங்கிருந்து வந்தது நாட்டின் உயர்பதவியை வகிப்பவர்., நான்கு வருட விமானப் பயண செலவு 1484 கோடி ரூபாய் செலவுசெய்தவர்.. பத்துலட்சத்திற்கு நரேந்திர மோடியென பெயரிட்ட கோட் அணிந்தவர்.. இந்தியாவின் முதன்மை பணக்காரரின் நண்பர் எப்படி ஏழையாக முடியும்..
..
ரபேல் விமான பேரத்தில் ரகசியம் காக்கபடவேண்டுமென கூறியதற்கு அப்படியொரு ரகசியகாப்பே அதில் இல்லையென சம்பந்தபட்ட நாடு பிரான்ஸ் சொல்லிவிட்டதென்பது என்றால் பதிலில்லை..
கருப்பு பணம் மீட்பென்றீர்களே அது படுதோல்வி என்றால் கருப்புபணம் மீட்பு தொடர்ந்து நடக்கும் என்கிறார்.. இந்தியா விடுதலை அடைந்ததலிருந்து கருப்புபண மீட்பு நடந்துகொண்டுதானிருக்கிறது ..
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது இந்தியாவில் மட்டும் ஏறுகிறது அந்த பணம் மோடி பணக்கார நண்பருக்கு போகிறது என்றால் ..அது குறித்து வாயைதிறக்கவில்லை
மதவெறி சாதிவெறி தாண்டவமாடுகிறதே என்றால் .. இந்தியவரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதென்றால்..
பிரதமரின் நண்பர்கள் பத்து இருபது பணக்காரர்களுக்கு 2.5 லட்சம் கோடி தர முடிகிறது.. விவசாயிகள் சிறுதொழில் செய்வோர் நிலை என்ன வென்றால் பிரதமர் வாய் திறப்பதில்லை.. அமிர்ஷாவின் மகன் மூன்றே மாதத்தில் 16000 மடங்கு சொத்து சேர்த்திருக்கிறாரே என்றால் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்..
..
ஏழைத்தாயின் ஆட்சி செய்த குஜராத்தில் பிணகுவியலும் இரத்தவாடையும் .. கண்ணீரோடும் பயத்தோடும் கலங்கிநின்ற பெண்கள் முதியவர்களும் சிறு குழந்தைகளும்.. எதிர்வினையாற்றதான் செய்வார்களென்ற திமிர் பேச்சே,காரணம் என்பதை.. அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களே தங்களிடம் #அரசதர்மத்தோடு நடத்துகொள்ளுங்கள் என்றதெல்லாம் ஏழைத்தாயின் மகன் செவிகளை அடையாததால் ..இன்றைக்கு அதே பொய் பேசும் வித்தை உணர்ச்சியை தூண்டி மத சாதி மோதலை கையிலெடுத்து காரியம் சாதித்ததால் .. பொய்யும் புரட்டும் போட்டோஷாப்பும் .. பந்தலிட்டு பதவிக்கு வரமுடிந்தது ..
மெல்ல வெளுத்தது சாயம் ..இன்று பதிலளிக்க முடியாமல் அதே பழைய வசனத்தை திரும்ப திரும்ப பேசுகிறார்
..
ஆனால் இப்போது சொந்த மாநில மக்களே விழிப்போடு இருக்கிறார்கள் அழுகாச்சி காவியத்தை பார்க்கவோ கேட்கவோ தயாரில்லை ..குஜராத் வளர்ச்சியென்ற மாயை பல்லிளிக்கிறது .. காரணம் எதிலும் உண்மையில்லை ..பொய் சலங்கைகட்டி ஆடும் ஆனால் ஆட்டம் முடியும் போதுதான் தெரியும் அது கள்ள ஆட்டமென்று .. அதனால் தான் பிரதமரால் விழிபிதுங்கி நிற்கும் நிலை..
காங்கிரஸ் 60 ஆண்டுகளில் என்ன செய்ததென்று எதிர்கேள்வி கேட்டு திசை திருப்புகிறார்..
நாடு மோடியின் ஆட்சியில் எல்லா நிலையும் துறையிலும் நலிந்து போய்விட்டது எல்லாதரப்பு மக்களும் சொல்லண்ணா துயரத்தில் .. ஒரேயொரு சமூகம் பயனடைகிறது..
..
நாடு எதிர்ப்பார்த்து நம்பிக்கையோடு காத்துநிற்கிறது..
பாராளுமன்றத்தில் ஒலித்தது என் குரலல்ல.120 கோடி மக்களின் மனக்குமுறல் என்றார் ராகுல் ...ஆம் அதுதான்
ஒவ்வொரு இந்தியனின் மனதில் இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக