வெள்ளி, 20 ஜூலை, 2018

பொறி பறந்த ராகுல் காந்தியின் உரை.. கலங்கிப் போன மோடி..
கத்தி கூச்சல் போட்ட பாஜகவினர்


Kathiravan Mumbai :டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. ராகுலை பேசுவதை கேட்க கூட பொறுமை இல்லாமல், கூச்சலிட்டு பாஜகவினர் குழப்பம் செய்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார்.
பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.

விலைவாசி உயர்வு
இதில் ராகுல் அந்த ஒரு விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. மோடியின் அறியாமை காரணமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பணத்தை தற்போதையை மதிப்பு மொத்தமாக குறைந்துவிட்டது. விலைவாசி பெரிய உயரத்தை ஏற்றிவிட்டது. மோடி சந்தோசமாக ஊர் சுற்றும் போது, பெட்ரோல் டீசல் விலை கூடிவிட்டது. ஆனால் மோடி பணக்காரர்களுக்காக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார், என்றுள்ளார்.


மோடி பற்றி
மேலும் மோடி குறித்து பேசிய ராகுல், மோடி முழுக்க முழுக்க பொய்யாக பேசி இருக்கிறார். அவர் இதுவரை கூறியது எல்லாமே பொய், மோடி ஒரு பொய்யர் என்று மோடியை பார்த்து கண்ணுக்கு எதிராக பேசினார். மேலும் மோடியால் என் கண்ணை கூட பார்க்க முடியாது. அவர் அந்த அளவிற்கு பொய் சொல்லி இருக்கிறார். மோடி என் கண்ணை பார்த்து பேச வேண்டும், அவருக்கு அந்த தைரியம் இல்லை, என்றார் .

அமித் ஷா
மேலும் அமித் ஷாவின் மகன் ஜெ ஷாவின் ஊழல் குறித்தும் பேசினார். ஜெ ஷா பல கோடிகளில் ஏமாற்றிக்கொண்டு இருக்கும் போது, மோடி இங்கே ஏழைகளில் காவலன் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருந்தார், என்றார். இதை கேட்டவுடன் அவையில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. பாஜக கட்சியினர் எழுந்து கூச்சலிட தொடங்கினார்கள்.

நிர்மலா சீதாராமன் பற்றி
அதேபோல் அவர் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்தும் பேசினார். நிர்மால சீதாராமன் அவையில் பொய்யான தகவல்களை பேசுகிறார். ரபேல் ஊழல் குறித்து பேச மறுக்கிறார். மோடியை போலவே நிர்மலா சீதாராமன் பொய்களை மட்டுமே பேசுகிறார் என்றார். இதற்கு நிர்மால் கொதித்து எழுந்து கத்தினார்.

பாஜகவை சீண்டியது
இதனால் பாஜகவினர் பெரிய அளவில் சீண்டப்பட்டு இருக்கிறார்கள். தான் பேசினால், அவையில் சூறாவளி ஏற்படும் என்று ராகுல் கூறினார். அவருக்கு அளிக்கப்பட்ட மொத்த நேரத்திலும் அந்த சூறாவளி பாஜகவினரை பறக்க வைத்து இருக்கிறது. அவரை பேச கூட விடாமல், மோடியே கலங்கும் அளவிற்கு அவர் பேச்சு இருந்துள்ளது
Frw news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக