வெள்ளி, 20 ஜூலை, 2018

எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்குமா? வெளிநடப்பு?

எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்குமா?
மாலைமலர் :நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான
விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன. இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.


தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக