திங்கள், 16 ஜூலை, 2018

செய்தியாளர் ஷாலினி சாலை விபத்தில் உயிரிழப்பு ... மாலைமுரசு பத்திரிகையின்

ஷாலினி முகநூல் படம்
Kalai Mathi  ONEINDIA TAMIL   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள,பள்ளபட்டியில் வசிக்கும் சின்ன மருதுபாண்டியன் மகள் அங்கையர்கரசி, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவரை பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் சாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு, பள்ளபட்டிலிருந்து நேற்று சென்னை புறப்பட்டனர். 
 மதுரை - திண்டுக்கல் சாலையில் பொட்டிகுளம் அருகில் வந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 இந்த விபத்தில் மாலைமுரசு பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். நேற்று நண்பர்களை சந்தித்து பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி விபத்தில் மரணமடைந்த சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
ரூ.3 லட்சம் நிதியுதவி ரூ.3 லட்சம் நிதியுதவி அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஷாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஷாலினியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். 
 
இதேபோல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியாளர் ஷாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் மாலைமுரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அதுவும் அவரது பிறந்தநாளன்று உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இறைவன் திருவடி நிழலில் ஷாலினி அவர்களது இழப்பால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்
 
 டிடிவி தினகரனும் ஷாலினியின் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளரான செல்வி R.ஷாலினி சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்திகேட்டு ஆற்றோனா துயரம் கொள்கிறேன். துடிப்புமிக்க, செய்தியாளராக அவர் பணியாற்றிய விதமும், ஊடகங்களோடு இணைந்து அவர் கேட்கும் கேள்விகளும், அவரின் தனித்த அடையாளங்கள். குடும்பம், நிறுவனத்துக்கு இரங்கல் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மாலைமுரசு தொலைக்காட்சி நிறுவன குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 
 
கவனத்தோடு பயணம் இரவு பகல் பாராது ஓய்வின்றி பணியாற்றும் செய்தியாளர்கள், உரிய பாதுகாப்போடும், கவனத்தோடும் தங்களது சாலை பயணங்களை அமைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
 
 திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் செய்தியாளர் ஷாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஷாலினியின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார். 
மிகுந்த மனவேதனை மிகுந்த மனவேதனை 
இதேபோல் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், ஷாலினியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். ஷாலினியின் குடும்பத்திற்கு இரங்கலையும் அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக