திங்கள், 23 ஜூலை, 2018

திருச்சி : ஒரே வீட்டிற்குள் மூவர் ...தாயும் காதலனும் அவனோட காதலியும் .. கண்ணால் கண்ட சிறுவன் கொலை

Hemavandhana - ONEINDIA TAMIL  திருச்சி: இந்த கள்ளக்காதல் படுத்தும் பாட்டையும் அதனால் வரும் மிகபயங்கரமான விளைவுகளையும் என்னதான் செய்யறதுன்னே தெரியலையே? 
 திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதி சாந்தபுரம். இங்கு கட்டிட தொழிலாளியாக இருப்பவர் மீனாம்பாள். 40 வயதாகிறது. இவரது கணவர் கேன்சர் வந்து 6 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு அங்குராஜ் என்ற மகன். 14 வயதான அவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குராஜ், வீட்டில் மயங்கி வீழே விழுந்துவிட்டதாக கூறி அவனை தூக்கிக் கொண்டு மீனாம்பாள் மருத்துவமனைக்கு பதறியடித்து கொண்டு சென்றார். மீனாம்பாளுடன் அவர் தோழி லட்சுமியும் சென்றார். ஆனால் டாக்டர்கள் அங்குராஜை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
 இதையடுத்து அங்குராஜ் சடலத்தை வீட்டிற்கு கொண்டுவந்த மீனாம்பாள் நடுவீட்டில் கிடத்திக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார். ஆனால், அங்குராஜ் சாவில் மரணம் இருப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
இதையடுத்து மீனாம்பாள் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த அங்குராஜ் சடலத்தை கைப்பற்றினர். விசாரணை ஆரம்பம் விசாரணை ஆரம்பம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அங்குராஜ் உடலை கொடுத்து பிரேத பரிசோதனை செய்ய சொன்னார்கள். அப்போது,அங்குராஜ் கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சு திணறி இறந்திருக்கிறார் என தெரியவந்தது. அவ்வளவுதான். 
 
போலீசார் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கினர். அதிரடியாக விசாரணையை துவக்கினர். முதல் விசாரணையே தாய் மீனாம்பாள்தான். அடுத்ததாக லட்சுமி. இருவரிடமும் விசாரணை ஆரம்பமானது. அப்போது மீனாம்பாள் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் இடிபோல் வந்து போலீசாரின் தலையில் இறங்கியது. 
 
 
கொத்தனார் வேலை செய்யும் முத்தழகு என்ற முத்தையனுடன் மீனாம்பாளுக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அதனால் முத்தையனை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் தண்ணி அடித்துவிட்டு, பின்னர் ஜாலியாக இருந்துள்ளனர். இரண்டாவது இடி. மீனாம்பாள் போதாமல் முத்தையனுக்கு இன்னொரு கள்ளக்காதலி இருக்கிறாராம். அவர்தான் மீனாம்பாள் தோழி லட்சுமி. இவரும் வீட்டுக்கு வருவாராம். 3 பேரும் தண்ணி அடித்துவிட்டு, 3 பேரும் ஒன்றாகவே ஜாலியாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர். தீர்த்துகட்ட முடிவு தீர்த்துகட்ட முடிவு மூன்றாவது இடி. அம்மா செய்யும் தவறை மகன் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டான். இதனால் அம்மாமேல் அதிக பிரியமாக இருந்த அங்குராஜ் தனியாக உட்கார்ந்து பலமுறை அழுதிருக்கிறான். அம்மாவை வெறுக்கவும் முடியாமல், கண்டிக்கவும் வயதில்லாமல், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி, அம்மாவை திருத்த சொன்னான். இங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. உறவினர்கள் மீனாம்பாளிடம் கள்ளக்காதலை கைவிட சொல்ல, மீனாம்பாளுக்கு தன் மகன் மீது வெறுப்பும் ஆத்திரமும் வந்து அவனை தீர்த்து கட்ட எண்ணினார். கழுத்தை நெரித்த தாய் கழுத்தை நெரித்த தாய் நான்காவது இடி. இப்போது கள்ளக்காதலர்கள் மீண்டும் தண்ணி அடித்தபடி, அங்குராஜை எப்படி கொல்லலாம் என ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி அங்குராஜ் தூங்கபோகும்போது, குடிக்கும் பானம் ஒன்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மீனாம்பாள் குடிக்க சொன்னார். அம்மா கொடுத்ததால் பேசாமல் வாங்கி குடித்துவிட்டு தூங்க சென்றுவிட்டான் மகன். சிறிது நேரம் கழித்து, மீனாம்பாளும், லெட்சுமியும் அங்குராஜ் கழுத்தை கயிற்றால் நெரித்தனர். தன் கண் முன்னாலேயே கை, கால்களை உதைத்துக்கொண்டு மகன் துடிதுடித்து சாவதை பார்த்தாள் அந்த புண்ணியவதி. பிறகு அவன் இறந்துவிட்டதை முத்தழகனிடம் சொல்ல, முத்தழகனோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடுங்கள் என ஐடியா கொடுத்துள்ளார். என்ன செய்தாலும் தகும் என்ன செய்தாலும் தகும் அதன் பிறகு நடந்தவைதான் முதலில் படித்த சில பாராக்கள். கள்ளக்காதலர்கள் வீட்டிற்குள் தண்ணி அடித்துவிட்டு கும்மாளம் போடுவதை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்தான், போலீசாரிடம் இது கொலையாக இருக்கும் என துப்பு கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இரு பெண்களையும் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் போலீஸார் அடைத்தனர். கூடவே இருந்து குடித்துவிட்டு ஆட்டம்போட்ட முத்தழகன், கள்ளகாதலிகள் இருவரும் கம்பி எண்ணுவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். அவருக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக