திங்கள், 23 ஜூலை, 2018

மோசடி செய்தாரா விசு..? - பாக்யராஜ் உள்ளிட்டோர் போலீசில் முறைப்பாடு

 m.dailyhunt.in/ :மோசடி செய்தாரா விசு..? - பாக்யராஜ் உள்ளிட்டோர் போலீசில் முறையிட்டு உள்ளனர் . தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு உட்பட சிலர் , சங்கத்தின் பணத்தை அபகரித்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர் . முன்னதாக சங்கத்தின் தற்போதைய தலைவர் பாக்யராஜ், பொருளாளர் ரமேஷ்கண்ணா உள்ளிட்டோர் இந்தப் புகாரை இன்று அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்கள், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், டிரஸ்டி மதுமிதா உள்ளிட்டோர் பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி சங்கத்தின் பணம் 37 லட்சம் ரூபாயை மோசடியாக அறக்கட்டளைக்கு மாற்றியதாக கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக