மின்னம்பலம்: கறுப்புப்
பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்தின்
குடும்பத்தினர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியதாகவும், அமெரிக்காவில் இரு நிறுவனங்களில் கணக்கில் காட்டாமல் முதலீடு செய்ததை மறைத்ததாகக் கூறியும் சொத்துகளின் விவரங்கள் வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்கள், வங்கிக் கணக்குகள், அவர்களது அனைத்துச் சொத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என வருமான வரித் துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரியும், இதுதொடர்பாக கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்கக் கோரியும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், கறுப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் நளினி, கார்த்தி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராகப் புகார் மனுவை சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி மூன்று பேரையும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தார். அதன்படி மூன்று பேரும் ஜூன் 25ஆம் தேதி ஆஜராகினர். நேற்று (ஜூலை 23) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி மலர்விழி ஜூலை 30ஆம் தேதி மூன்று பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக