புதன், 18 ஜூலை, 2018

எடப்பாடியின் சம்பந்தி வீட்டில் தமிழக கஜானா? பேரம் படியும் வரை தொடரும் ரெயிட்?

ஆலஞ்சியார்  : மத்திய அரசு வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி
எடப்பாடியின் நெருக்கிய உறவினர் செய்யாதுரையிடமிருந்து
163 கோடி ரூபாய் ரொக்கம் , 150 கிலோ தங்கம் கைப்பற்றியிருக்கிறது S R & Co பெயரில் நிறுவனத்தை நடத்தியவர் தான் இவர். முன்பு ஒரு சாதாரண ஆட்டு வியாபாரியாக இருந்தவர் பின்னர் ஆடுகளை வெட்டும் கசாப்புகடை நடத்தி வந்தார். தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை , நெல்லை பைஃபாஸ் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். எடப்பாடி முதல்வராக பதவியேற்ற உடன் இவரது நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்தது. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கடைக்கோடி கிராமத்தில் பிறந்தவர். கையெழுத்து கூட போடத் தெரியாதவர் என்பது கூடுதல் சிறப்பு..
வருமான வரி துறை செயயாத்துரை யை எதற்காக ரெய்டு செய்தது என்ற காரணம் இப்போது புரிகிறதா ..
பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் எடப்பாடியின் சம்பந்திக்கு தொடர்ந்து வழங்கபடுகிறது மிக பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனால் எடப்பாடி சம்பந்தியை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன..


பிரதான எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் இனியும் எடப்பாடி ஆட்சியில் தொடர்வது விசாரணையை பாதிக்குமென்றும் லஞ்ச ஒழிப்புதுறை வழக்கை கையிலெடுக்க வேண்டுமென்று கூறிவரும் நிலையில்..
திருநாவுகரசரும் திருமாவும் ஆட்சியை கலைக்க சதி என்கிறார்கள்..
..
முதலில் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்..
தொடர்ந்து கொள்ளையடிப்பதும் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் கண்டெடுப்பதும் .. கண்டெய்னர்களில் பணி இடமாற்றம் நடப்பதும்.. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெறுகிறதே இவை குறித்து திருமா வின் பதில் என்ன.. மத்தியரசு மிரட்டுகிறதென்றும் அமிர்ஷா வருகைக்கு பிறகே ரெய்டுகள் நடப்பதாகவும் கூறுவதை ஏற்றாலும் .. நிச்சயமாக அதிமுக ஆட்சி அகற்றபடவேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை.. இந்த அடிமைகளுக்கு முன்பே தெரியும் நம்மை காரியம் முடிந்தவுடன் கழுவேற்றுவார்களென அறிந்திருந்தும் தலையாட்டியாய் மாநில நலன்களுக்கெதிராக மத்தியரசு நடத்திட்ட திட்டங்களுக்கு ஒப்பதல் வழங்கியதும்.. அரசு அதிகாரிகள் கூட அதிகாரம் செலுத்துகிற நிலையில் கைகட்டி நிற்கிற கேவலமான செயல்களை செய்தும்.. முதல்வரென்றும் பாராது இருக்கையில் அமராமல் எழுந்துநின்று கைகட்டி பாஜகவினருக்கு சேவகம் செய்ததும் தமிழகத்தை ஒட்டுமொத்தமாக கூனிகுறுகி நிற்கவைத்த இந்த கேடுகெட்ட இழிவானவர்களை இன்னமும் ஆட்சியில் தொடரவிடவேண்டுமா.. இப்போது கூட குரலை உயர்த்த அஞ்சி திராவிடத்தை துணைக்கழைக்கிறார்கள் இந்த தொடை நடுங்கிகள்.. இவர்கள் இன்னும் விட்டுவைத்திருப்பது.. நாட்டிற்கு தமிழக மக்களுக்கு இனத்திற்கு செய்கிற கேடு..
..
ஜனநாயக மரபுகள்,குறைந்தபட்ச நேர்மை.. நீதி,நியாயம்,அரசியல் மாண்பு , ஒழுக்கம், சுயமரியாதை, இவை எதுமே இல்லாத கேடுகெட்ட ஆட்சியை நடத்தும் மக்கள் விரும்பாத மக்கள் தேர்வு செய்யாத கொள்ளைப்புறமாக பாசிசம் நுழைய.. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஆட்சி இனனமும் தொடர வேண்டுமா என திருமா பதில் சொல்ல வேண்டும்.. மத்தியரசு மிரட்டுகிறதென்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு பரிதாப படுவது மக்களுக்கு/நாட்டிற்கு செய்கிற துரோகம்..
..
தகுதியற்றவர்களை துரத்தி நேர்மையான.. மக்கள் விரும்புகிறவர்கள் ஆட்சிக்கு வர தேர்தல் சந்திப்பதே சிறந்தது..
..
ஆலஞ்சியார்
கோடிக்கணக்கில் பணமும் கிலோ கணக்கில் நகையும் கைப்பற்றியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக