புதன், 4 ஜூலை, 2018

உப்புக்கும் நமக்கும் உள்ள உறவு

உப்பு நம்மை என்ன செய்யும்?மின்னம்பலம்:  தினப் பெட்டகம் – 10 (04.07.2018)
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று சொல்வார்கள். நம் உணவில் அந்தளவு முக்கியமானது உப்பு. ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்று பழமொழிகூட உள்ளது. உப்பு இல்லாமல் உணவு ருசிக்காது என்பதே இதன் பொருள். உப்பைப் பற்றிய சில தகவல்கள்:
1. நம் உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் உப்பு இருக்கிறது. ஒருவரின் உடலில் சராசரியாக 250 கிராம் உப்பு இருக்கும்.
2. பல நாடுகளில் உப்பு பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
3. நம் உடல் எடையில், ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் என்ற அளவில் உப்பை உட்கொண்டால் மரணம் நிகழும்.
4. மொத்த உப்பு உற்பத்தியில் 7%தான் உணவுக்காகப் பயன்படுகிறது. மீதமுள்ளது ரசாயனத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
5. பழங்கால சீன மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு பவுண்டு உப்பைச் சாப்பிட்டுவிடுவார்களாம்.
6. பொலிவியா நாட்டில் ஓர் ஹோட்டல் முழுவதும் உப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

7. உப்புத் தண்ணீரில் மூழ்குவது, சாதாரண நீரைவிடக் கொடுமையானது. உப்பு நம் செல்களில் இருக்கும் ரத்தம் அனைத்தையும் நுரையீரலுக்கு இழுத்துவரும். பிறகுதான் மரணம் நிகழும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் ரத்தத்தில் மூழ்கி இறப்பதைப் போன்றது.
8. கடலில் இருக்கும் ஐஸைச் சாப்பிடலாம். கடல் நீரில் இருக்கும் 10இல் ஒரு பங்கு உப்புதான் ஐஸில் இருக்கும்.
9. ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு போதும் நம் உடலுக்கு.
10. நாம் உட்கொள்ளும் உப்பில் 25% மட்டுமே நாம் நேரடியாக உட்கொள்வது. மற்றது எல்லாம் நாம் உண்ணும் மற்ற பொருட்களில் ‘ஒளிந்து’ இருக்கிறது.
- ஆஸிஃபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக