வியாழன், 12 ஜூலை, 2018

பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம்! நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கினார்

நக்கீரன்  : விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஷ்ரப். இவர் சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, என் மகனுக்கும் முன்னாள் போலீஸ்காரரான ஜபாருல்லாகான் மகளுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தேன். ஜபருல்லாகானும் அவரது மகனும் அளித்த ஆசை வார்த்தைகளை கேட்டு என் மகனும் அவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளான். அதை வைத்து அவர்களும் 20 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியுள்ளனர். மேலும், என் மகனின் மாத சம்பளத்தையும் ஏமாற்றி வந்தனர். இதை என் மகன் என்னிடம் சொல்லி அழுதான், பின்னர் அவன் வேலை சம்பந்தமாக வெளிநாட்டுக்கு சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக