மின்னம்பலம்: ராமநாதபுரத்தை
அடுத்த இடையர் வலசு கண்மாய் பகுதிக்குள் 12 வயதுச் சிறுவன் ஒருவன் நீண்ட
நாட்களாக ஆடு மேய்ப்பதாக "Child Line" அதிகாரிகளுக்கு இன்று (ஜூலை 12)
தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் சார்பு வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம், பேராவூரணி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரது மகன் என்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தை அடுத்த இடையர்வலசு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் 1 லட்சம் ரூபாய் பணத்திற்கு தன்னை விலைக்கு வாங்கி ஆடு மேய்க்க வைத்ததாக கண்ணீருடன் சிறுவன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கடத்துவதாக பல இடங்களில், வடமாநில இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு மத்தியில், பெற்றோர்களே தங்களது குழந்தைகளைப் பணத்திற்காக விற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக