புதன், 25 ஜூலை, 2018

வைகுண்ட ராஜனின் தாதுமணல் முறைகேடு 1170 பக்க அறிக்கை ,, நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதிக்குமா?

Venkat Ramanujam : விவி மினரல்ஸ் தாது மணல் குவாரி முறைகேடுகள் திரு News7Tamil
ககன்தீப் சிங் பேடி IAS விசாரணைக் குழுவின் 1170 பக்க அறிக்கை விவாதிக்குமா
“தாதுமணல் ஊழல்” நடைபெற்றுள்ளது என்று செய்திகள் வெளிவந்த பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் 6.8.2013 அன்று அரசுக்கே ஒரு கடிதத்தை எழுதி, விசாரிக்க கோரிக்கை வைக்க ...
நீதிமன்றம் தலையிட்டால் வேண்ட வெறுப்பாக ஜெயலலிதா அரசு ககன் தீப் சிங் பேடியை அனுமதிக்க..
சிறப்பு விசாரணைக் குழுவும் 17.9.2013 அன்றே விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தும் அந்த அறிக்கையின் ரகசியத்தை பேணிக் காப்பாற்றியது சொத்து குவிப்பு குத்துவிளக்கு சாட்சாத் தண்டிக்கபட்ட குற்றவாளி ஜெயலலிதாவே தான் ...
இப்படி ஐந்து வருடமாக பாதுகாத்து பேணி காத்த விசாரணை அறிக்கை சொல்வது தான் என்ன..
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடி மெட்ரிக் டன் தாதுமணல் 52 தாதுமணல் குவாரிகளில் இருந்து அள்ளிச்செல்லப்பட்ட மாபெரும் முறைகேடு ..

குவாரி இல்லாத இடங்களுக்கு தாது மணலை எடுத்துச் செல்லும் போக்குவரத்து அனுமதிச் சீட்டு (Transport Permit) வழங்கப்பட்ட அதிமுகவின் நேரடி முறைகேடு ..
கார்னட் மணலின் விலை டன்னுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை போன காலகட்டத்தில் கார்னட் மணலின் விற்பனை விலை மெட்ரிக்கு டன்னுக்கு வெறும் 377 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட ஜெயலலிதா ,சசிகலா வகையறா தெளிவான முறைகேடு...
அள்ளிச் செல்லப்பட்ட கார்னட் மணல் கணக்கும், அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து அனுமதி சீட்டுக்களின் கணக்கும் ஒத்துப் போகவில்லை என்கிற குமாரசாமி கணக்காக முறைகேடு...
இப்படி இந்த 1170 பக்க அறிக்கை மூலம் வைகுண்டராஜா வின் #Jayalalithaa #EPS #OPS #MODI அரசுகளின் பரஸ்பர விசுவாசமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது ..
ஜாதி பாசத்துடன் சீமானை தூக்கி வளர்க்கும் #news7tamil சானலில் அதை Nelson Xavier தான் விவாதிக்க வேண்டும் என்பது உங்களது பேராசையில் வராதா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக