சனி, 9 ஜூன், 2018

டில்லியில் புழுதிப்புயல்.. விமானங்கள் திருப்பி விடப்படுகிறது .. Dust Storm Wind Speed Up-To 70 To 80 KMPH Hit Delhi And NCR


dhinamalar :புதுடில்லி: தலைநகர் டில்லியில் காலை முதல் தெளிவான வானிலை இருந்த நிலையில், மாலையில் திடீரென இருள் சூழ்ந்தது. தொடர்ந்து புழுதிப்புயல் வீச துவங்கியது. சதார்புர், அக்பர் சாலை, துவாரகா, ஆர்கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. மக்கள் வெளியே வர முடியாமல், வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனால், பல சாலைகள் வெறிச்சோடியுள்ளன. வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர்.
மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் புயல் வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக