வெள்ளி, 8 ஜூன், 2018

ஆன்லைன் மூலம் பொருட்செலவில்லாமல் உயர்கல்வி படிக்க நல்ல வாய்ப்பு.

Alwar Narayanan : யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் !!!
https://onlinecourses.nptel.ac.in/
இன்று ஒரு அலுவலக நண்பரின் மூலமாக தெரிந்துகொண்டது. இந்தியாவில் உள்ள எல்லா IIT மற்றும் IISc கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் சேர்ந்து இலவசமாக ஆன்லைன் மூலம் பல்வேறு தலைப்புகளில் (35000 மணிநேர வீடியோ) ஆவணப்படுத்தி உள்ளார்கள். கல்வியை இலவசமாக வழங்கவேண்டுமென்று அரசால் 2003 முதல் நடத்தப்படுகிறது.
கம்பியூட்டர் அல்லது ஸ்மார்ட் தொலைபேசி மூலம் இந்த கோர்ஸ் எடுக்கலாம். கடைசியில் வெறும் 1000/- ருபாய் கட்டி தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம்.
வான சாஸ்திரம் முதற்கொண்டு வெல்டிங் வரை, விவசாயம், தொழில் நுட்பம், சுற்றுசூழல், விமான தொழில்நுட்பம், சமூகவியல், பொருளாதாரம், சுயதொழில் என்று கணக்கில்லாத தலைப்புகள் இருக்கின்றன.
https://onlinecourses.nptel.ac.in/
இதை சொடுக்கி படித்து பயன்பெறுங்கள். பெரும் பொருட்செலவில் உயர்கல்வி படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக