வெள்ளி, 8 ஜூன், 2018

தவ்ஹீத் ஜமாத் கலைக்கபடவேண்டிய அமைப்பு.,, பணத்தில் முறைகேடு.. காமகொடூர விளையாடல்கள்

ஆலஞ்சியார் : TNTJ.. நாற்றமடிக்கிறது.. தெளிவற்ற கொள்கை முழக்கமும்..
அதீத நம்பிக்கையும் ஒருநாள் பொய்த்து போகிறபோது.. அதுவரை நடத்திவந்த செயல்களின் நம்பகதன்மை இழந்துவிடுகிறது.. தனிமனித ஒழுக்கம் அவரின் தனிப்பட்ட விடயமாய் கருத்தில் கொண்டாலும் வெளியில் தூய்மை பேசி திரியும் பொய் முகத்தை கிழித்திவிடுகிற போது .. நிஜம் பல்லிளிக்கும்.. ..
இவர்களின் கொள்கை ஒரிறை .. அதில் மாற்றத்தையா சுன்னத்வல் ஜமாத் செய்தது இல்லை .. சில கலாச்சார நிகழ்வுகளை அந்தந்த மண் சார்ந்த விடயங்கள் சிலவற்றை தவிர்க்கமுடியாது செய்ததை இவர்கள் .. இறைமறுப்பென்றும்.. இதே ஷரியத்திலிருந்து பிரிந்து ஷிர்க்கில் போய்விட்டதாகவும் மிகப்பெரிய பிரச்சாரத்தை தொடுத்து சமுதாய மக்களை பிரித்ததில் பெரும் பங்காற்றியது.. அது உறவின் விரிசல் வரை கொண்டு சேர்த்து ஒரே குடும்பத்தில் பகைமையை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றியது..
ஒற்றுமையை சிதைக்கிற எந்தவொரு இயக்கமும் காலசக்கரத்தில் தானாக கழட்டிவிடப்படும்.. அதற்கான காரணவிடயங்களை காலம் செய்து கொண்டே இருக்கும்....
தனிநபர் புகழ்பாடல் இங்கில்லை என்றவர்கள்.. ஒவ்வொருவரின் சங்கதிகள் வெளியே வர நாற்றமடித்த நிலை.. பி.ஜே எனும் கயமையை தாண்டி.. தொடர்ந்து அல்தாபி.. இப்போது ..சையத் இபுராகிம் ..போலி பெயரில் இருந்து நிகழ்த்தியது வெளியாகியிருக்கிறது.. 

இன்னும் வரும்..
 இதற்கிடையில்.. பி.ஜே வின் தூண்டுதலாலேயே ..
முஸ்லிம் சமூகத்தில் பல இளைஞர்கள் தவறிழைத்து சிறைக்கு செல்ல இவர் காரணமாக இருந்ததாகவும் அதாவது P. ஜெய்னுல் ஆப்தீனின் தவறான போதனைகள் தான் காரணமாக இருந்ததாக நாம் ‌அறியமுடிகிறது.
( கோவை குண்டு வெடிப்பு மற்றும் ‌அதனை தொடர் சம்பவங்கள்) இது சாதாரண விடயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. என்று ஊடகவியலாளர் Sa Sufiyan தன் முகநூல் பக்கத்தில் பதறியிருக்கிறார்..
பல அப்பாவி இளைஞர்கள் பாதிப்பு அடைந்ததற்கு பி. ஜெய்னுல் ஆப்தீன் தான் காரணமாக இருந்ததாக இஸ்லாமிய சமூகத்தில் இருந்தே குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளது. ஒருவேளை இது தேசவிரோத நடவடிக்கை சம்பந்தப்பட்ட ஒன்றாக கூட இருக்கலாம். பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள் தான் என்றும் சம்பந்தப்பட்ட பலர் குற்றச்சாட்டுகளை வைத்து வருவதைக் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது..
இந்த குற்றசாட்டு பொய்யாக கூட இருக்கலாம் அப்படியெனில் குற்றம் சுமத்தியவர்கள் தண்டிக்கபடவேண்டும்.. உண்மையெனில் பி.ஜே தண்டிக்கபடவேண்டும்..
..
இஸ்லாமிய இளைஞர்களில் வழிகெடுத்ததில் பெரும்பங்கு இந்த தவ்ஹீத் ஜமாத்திற்குள்ளதென்ற குற்றசாட்டு தொடர்ந்து இஸ்லாமிய சமூக மக்களாலேயே தொடர்ந்து சொல்லபட்டுவருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்..
..
ஜகாத் பணத்தில் முறைகேடு.. மார்க்க பயில வந்த சிறுமிகளை தொந்தரவு செய்தது .. காமகொடூர விளையாடல்கள் .. சமுதாய ஒற்றுமையை சிதைத்து உறவுகளில் பிரிவினையை உண்டு செய்து .. மிகப்பெரிய சமுதாய பின்னடைவிற்கு காரணமாக .. சமுதாய கெடுதியாய் திகழும்
தவ்ஹீத் ஜமாத் கலைக்கபடவேண்டிய அமைப்பு..
..
ஆலஞ்சியார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக