திங்கள், 11 ஜூன், 2018

உத்தர பிரதேசம் குழந்தைகள் உயிர்காத்த டாக்டர் கபில் கானின் தம்பி மீது துப்பாக்கி சூடு .... பாஜக ஆட்சியின் இரத்த வெறியாட்டம்

UP: Gorakhpur Dr.Kafeel Khans brother shot at night, admitted in the hospital உத்தரபிரதேசம், கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இளைய சகோதரர் ஜமீல், அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார். மூன்று இடங்களில் குண்டு பாய்ந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி... "எங்களை எப்படியும் கொன்றுவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். இப்போ என் தம்பியை சுட்டுள்ளனர்...". - டாக்டர் கஃபில் கான். அந்தக் குடும்பத்துக்கு எத்தனை முறை இன்னல் கொடுப்பீர்கள் காவிகளே ?
 ஏழை குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது குற்றமா ? அந்த மனிதன் மருத்துவனாய் இருப்பது குற்றமா? அந்தக் குடும்பம் இருப்பதுதான் குற்றமா? இது தேசமா?
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் வெளியாகி இருக்கும் டாக்டர் கபீல் கானின் சகோதரர் தற்போது மர்ம நபர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருக்கும் பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சென்ற ஆண்டு மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் மரணமடைந்தனர்.உத்தர பிரதேச அரசு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் அளிக்காததால் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது. இதை வெளியே தெரியபடுத்தியவர், டாக்டர் கபீல் கான். அவர்தான் தனது சொந்த காசில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றினார்.

ஆனால் அரசின் தவறை வெளியே கொண்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் . பின் 8 மாதம் சிறையில் இருந்துவிட்டு, சென்ற ஏப்ரல் மாதம்தான் அவர் வெளியே வந்தார். தற்போது இவரது தம்பி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
35 வயது நிரம்பிய அவரது தம்பி காசிப் ஜமீல் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். மொத்தம் நான்கு தடவை அவர் சரமாரியாக சுடப்பட்டுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது நான்கு குண்டுகளும் நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. யார் இந்த செயலை செய்தது என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக