புதன், 20 ஜூன், 2018

காஷ்மீர் .. குடியரசு தலைவர் ஆட்சி .. உமர் அப்துல்லா ஆட்சி அமைக்க மறுப்பு

தினமலர்: ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அங்கு உடனடியாக கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., நேற்று(ஜூன் 19) வாபஸ் பெற்றது. இதனையடுத்து முதல்வர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார். தொடர்ந்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.இந்நிலையில் ஜம்மு- காஷ்மீரில் கவர்னர் வோராவின் ஆட்சிக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்கு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஜம்மு - காஷ்மீரில் எட்டாவது முறையாக கவர்னர் ஆட்சி அமலாவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக