வியாழன், 28 ஜூன், 2018

பெண்ணின் சுய இன்ப பாடலாக லதாவின் பாடலை ....இயக்குனர் கரன் ஜோகர் மீது லதா மங்கேஷ்கார் குடும்பம் ,,,


நெட்ஃபிளிக்ஸ் tamil.filmibeat.com- siva : சுய இன்ப சீனுக்கு லதா மங்கேஷ்கர் குரலா?- மும்பை: லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை தவறான காட்சிக்கு பயன்படுத்திய இயக்குனர் கரண் ஜோஹார் மீது மங்கேஷ்கர்கள் கோபத்தில் உள்ளனர்.
ஷாருக்கான், கஜோல், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரித்திக் உள்ளிட்டோரை வைத்து கரண் ஜோஹார் இயக்கிய கபி குஷி கபி கம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்கில் லதா மங்கேஷர் பாடிய கபி குஷி கபி கம் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. கரண் ஜோஹார் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸில் குறும்படம் வெளியிட்டார். அதில் நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் காண அப்போது பின்னணியில் லதா மங்கேஷ்கர் பாடிய கபி குஷி கபி கம் பாடல் ஓடியது. ஒரு பெண் சுயஇன்பம் காணும் காட்சிக்கு பலர் பஜனை போன்று மதிக்கும் பாடலை பயன்படுத்துவதா என்று லதா மங்கேஷ்கரின் உறவினர்கள் கரண் ஜோஹார் மீது கோபத்தில் உள்ளனர்.
< லதாஜி கபி குஷி கபி கம் பாடலை பாடி முடித்தபோது கரண் ஜோஹார் எவ்வளவு சந்தோஷப்பட்டார் என்பது எனக்கு தற்போதும் நினைவில் உள்ளது. தனது கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார். அப்படி இருக்க ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்று லதாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.






வேண்டாம்

வேண்டாம் அவரது பாடல் தவறாக பயன்படுத்தப்பட்டதை லதாஜியிடம் தெரிவிக்க விரும்பவில்லை. கரண் வேறு பாடலை பயன்படுத்தி இருக்கலாம் என்று லதாவின் குடும்பத்தார் வருத்தப்பட்டுள்ளனர்.






கணவன்

லஸ்ட் ஸ்டோரீஸில் கியா அத்வானி ஆசிரியையாக நடித்துள்ளார். அவரின் கணவரான விக்கி கவுஷலால் அவரை படுக்கையில் திருப்தி படுத்த முடியவில்லை. இதையடுத்து கியாரா சுயஇன்பத்தை நாடுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக