வியாழன், 28 ஜூன், 2018

எட்டுவழிசாலை .. சி பி எம் முன்னாள் எம் எல் ஏ தோழர் டில்லிபாபு கைது

vlcsnap-2018-06-27-10h28m34s828
Muruganantham Ramasamy : இங்கெல்லாம் பொங்குவது அறச்சீற்றம் கொள்வதெல்லாம் எந்த வகையிலும் அரசியல் செயல்பாடல்ல என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன்.. இருந்தாலும் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எம் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.டில்லிபாபு ஒரு உணவகத்தில் கைது செய்யப்பட்ட கணொளியை பாரத்தேன்.
அது எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதல்ல என்பது ஒருபுறமிருக்க இந்த காவல்துறை முழு வெறிநாய்க்கூட்டமாக மாறியிருப்பது துலலியமாக புலப்படுகிறது.விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன்.ஆனால் டில்லி பாபு போன்ற ஒரு மக்கள் ஊழியர் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற புரிதல்கூட இன்றி எடப்பாடியின் எச்சிலையை பொறுக்கித்தின்னும் ஒருவனால் காக்கி உடை அணிந்த காரணம் ஒன்றினாலேயே அவமதிக்கப்படவும் குறைந்தபட்ச மதிப்புகூட இன்றி நடத்தப்படவும் முடியும் என்றால் நாம் எத்தகைய கையறுநிலையில் உள்ளோம் என்பதை உணர முடிகிறது..

இந்த அராஜக ஆட்சிக்கான கால்கோல் தமிழக இடதுசாரிகள் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரு மங்குனிகளின் கூடாரத்தை அமைத்தபோதே இடப்பட்டது என்பதை நினைக்காமலிருக்க முடியவில்லை..

www.tamilantelevision.com/ : செங்கம் பகுதிகளில் பசுமை வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியினை எதிர்த்து மண்மலை செ.நாச்சிப்பட்டு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலம் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அருர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு விவசாய சங்க துணை செயலாளருமான  செங்கம் காவல்துறையினரால் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் சென்னை சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் பணி துரிதமாக செயல்பட்டுவருகிறது. இதற்காக நிலம் கைகயப்படுத்தும் பணி செங்கம் எல்லையான நீப்பத்துறையில் கடந்த வாரம் துவங்கியது. தற்போது அத்துகல் நடும் பணி நடைவெற்று வருகிறது.
இன்று செங்கம் வந்திருந்த அருர் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் டெல்லிபாபு விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் கரியமங்கலம் பகுதியல் உணவு விடுதியில் மதிய உணவு உண்டிருந்தபோது செங்கம் காவல்துறையினரால் வலுகட்டாயகமாக கைது செய்பப்பட்டார். அப்போது அவர் வர மறுக்கவே வலுகட்டயாமாக இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக