ஞாயிறு, 24 ஜூன், 2018

குஜராத்திலும் பவுத்தமே ஓங்கியிருந்தது... ஆரவல்லி மலைத்தொடரில் பவுத்த அடையாளங்கள்

AHMEDABAD: The Taranga Hill, part of the Aravalli range in north Gujarat, has long been regarded as an important Buddhist centre, with Dev ni Mori, a 3rd century AD site, revealing a stupa and a casket containing relics associated with Lord Buddha.
Chinniah Kasi : ஆரவல்லி மலைத்தொடரில் பவுத்த அடையாளங்கள் கண்டுபிடிப்பு!
குஜராத்திலும் பவுத்தமே ஓங்கியிருந்தது உறுதியானது
அகமதாபாத், ஜூன் 23 -
குஜராத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள தாரங்கா மலைப் பகுதியில் இந்தியத் தொல்லி யல் துறையினர் மேற் கொண்ட ஆய்வில் புத்த சமய ஸ்தூபியைக் கண்டு பிடித்துள்ளனர்.குஜராத்தில் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள தேவ்நீ மோரியில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பவுத்த சமய பழங்காலப் பொருட்களும் ஸ்தூபியும் புத்த விஹார்களும் நீண்டகாலமாக இருந்து வரு கின்றன.

இந்த நிலையில், இந்தி யத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது, ஸ்தூபி, மண்பாண்டம், கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. இது ‘க்ஷத்திரா’ காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. இங்கு தற்போது ஆய்வுப்பணிகள் துரிதப்படுத்தப் பட்டு உள்ளன. சுமார் 8 மீட்டர்விட்டம் கொண்ட சுட்டச் செங்கற்களால் ஆனக்கட்ட டம் ஒன்று நான்குபடிகளுடன் இருப்பதும் கண்டுபிடிக்கப் ப்பட்டு உள்ளதாக தொல்லியல் ஆய்வின் துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜித் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மிகமுக்கிய மான பவுத்த தலம் என்பதை, சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.சமீபத்தில் 50 மீட்டர் நீளம் கொண்ட கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடம் ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். வாத் நகரில் இருந்து தாரங்கா மலைப் பகுதியானது 38. கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும்.மேலும் மாநிலத் தொல்பொருள் துறையினர், வாத் நகரில் பவுத்த கோயில் ஒன்றையும் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக